5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இணையத்தில் வைரலாகும் தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’ படத்தின் புதிய போஸ்டர்

Raayan Movie Update: இந்தப் படத்தில் படத்தில் தனுஷுடன் சந்தீப் கிஷன், காளிதாஸ், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், துஷாரா விஜயன், அபர்ணா முரளி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். தன்னுடைய முதல் படத்தில் வயதான நபரின் உணர்வுகளை மற்றும் உறவு சிக்கல்களை மையமாகக் கொண்டு கதைக்களத்தை உருவாக்கியிருந்தார். இதன் பிளாஷ்பேக்கில் நிறைவேறாத ஒரு மெல்லிய காதலும் காட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் இரண்டாவது படத்தில் கேங்ஸ்டர் கதைகளத்தில் குடும்ப செண்டிமெண்ட்டை இணைத்து அவர் ராயன் படத்தின் கதைக்களத்தை உருவாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இணையத்தில் வைரலாகும் தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’ படத்தின் புதிய போஸ்டர்
‘ராயன்’ படத்தின் புதிய போஸ்டர்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Jun 2024 16:44 PM

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தார் தனுஷ். தற்பொழுது அவரின் 50 வது படமான ‘ராயன்’ திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார். 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தை தனுஷ் இயக்கினார். ராஜ் கிரண் மற்றும் ரேவதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். படம் வெளியாகியபோது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து நீண்ட காலங்கள் அவர் படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தாமல் இருந்த சூழலில் தற்போது மீண்டும் ராயன் படத்தின் மூலம் தனது இயக்குநர் வேலையை தொடங்கியுள்ளார் தனுஷ். தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் படத்தில் தனுஷுடன் சந்தீப் கிஷன், காளிதாஸ், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், துஷாரா விஜயன், அபர்ணா முரளி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். தன்னுடைய முதல் படத்தில் வயதான நபரின் உணர்வுகளை மற்றும் உறவு சிக்கல்களை மையமாகக் கொண்டு கதைக்களத்தை உருவாக்கியிருந்தார். இதன் பிளாஷ்பேக்கில் நிறைவேறாத ஒரு மெல்லிய காதலும் காட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் இரண்டாவது படத்தில் கேங்ஸ்டர் கதைகளத்தில் குடும்ப செண்டிமெண்ட்டை இணைத்து அவர் ராயன் படத்தின் கதைக்களத்தை உருவாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Also read… Movies List: இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்கள் இதோ!

கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் மற்றும் இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட் தொடர்ந்து வெளியாகி வருகிறது. முன்னதாக இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான, அடங்காத அசுரன் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலை தனுஷே எழுதி, ஏ.ஆர். ரகுமானுடன் சேர்ந்து அவர் இசையில் பாடி இருந்தார். அதனைத் தொடர்ந்து ’வாட்டர் பாக்கெட்’ என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது.

கடந்த ஏப்ரல் மாதத்திலேயே இந்த படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்ட சூழலில் ஜூன் மாதத்திற்கு இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படம் ஜூலை மாதத்திற்கு ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Latest News