Dilli Babu: பேச்சுலர், ராட்சசன் தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகினர்
கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்து வந்துள்ளார் தயாரிப்பாளர் டில்லி பாபு. அதில் சிகிச்சை பலனின்றி இன்று (செப்.9) அதிகாலை காலமானார். இவருடைய மறைவு திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருக்கிறது.
பேச்சுலர், ராட்சசன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் டில்லி பாபு உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வலம் வரும் நிறுவனம் ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி. இதன் நிறுவனர் ஜி.டில்லி பாபு. கடந்த 2015-ம் ஆண்டு பாபி சிம்ஹா நடிப்பில் வெளிவந்த ‘உறுமீன்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் டில்லி பாபு. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்த ராட்சசன் திரைப்படத்தை தயாரித்ததும் டில்லி பாபு தான். அப்படம் தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட்டானதும் அதை தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்தனர். அதனைத் தொடர்ந்து மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ஓ மை கடவுளே, பேச்சிலர், மிரள் மற்றும் கள்வன் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
இதில் ‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘பேச்சிலர்’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பினை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்து வந்துள்ளார் தயாரிப்பாளர் டில்லி பாபு. அதில் சிகிச்சை பலனின்றி இன்று (செப்.9) அதிகாலை காலமானார். இவருடைய மறைவு திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருக்கிறது.
Also read… ரஜினி, தனுஷ் பட வில்லன் விநாயகன் கைது… என்ன காரணம்?
Woke up to this shocking news.
Deeply saddened by the passing away of dear @Dili_AFF sir, who is a very friendly & highly passionate Producer. He had a lot of dreams but fate took him away.
Rest In Peace #DilliBabu sir. My heartfelt condolences to Team @AxessFilm & family. pic.twitter.com/J3S967WBk0
— G Dhananjeyan (@Dhananjayang) September 8, 2024
இவரது தயாரிப்பில் இயக்குனர்களாக அறிமுகமான பலர் தற்போது முன்னணி இயக்குனர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இவரது அடுத்த வெளியீடாக வளையம் என்ற படம் இருந்தது. இந்த படத்தில் அவரது உறவுகார பையனை ஹீரோவாக அறிமுகம் செய்ய இருந்தார். இந்நிலையில் இவரது இந்த திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 10 வருடங்களாக படங்களை தயாரித்து வரும் டில்லி பாபுவின் இறப்பிற்கு இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் இவருடைய மறைவுக்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.