OTT Movies: ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. நெட்பிளிக்ஸில் ஒரு த்ரில்லர் படம்! - Tamil News | Netflix, Ott movies, Unlocked | TV9 Tamil

OTT Movies: ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. நெட்பிளிக்ஸில் ஒரு த்ரில்லர் படம்!

Updated On: 

15 Jul 2024 18:39 PM

Unlocked ott Movies: Unlocked படம் 2023 ஆம் ஆண்டு தென்கொரிய மொழியில் வெளியான சைக்காலஜிக்கல் திரில்லர் வகை படமாகும்.கிம் டே-ஜூன் இயக்குநராக அறிமுகமான நிலையில் சுன் வூ-ஹீ-ஹே மற்றும் கிம் ஹீ-வான் மற்றும் யோனிம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் கடந்த ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியானது

1 / 6Unlocked

Unlocked படம் 2023 ஆம் ஆண்டு தென்கொரிய மொழியில் வெளியான சைக்காலஜிக்கல் திரில்லர் வகை படமாகும்.கிம் டே-ஜூன் இயக்குநராக அறிமுகமான நிலையில் சுன் வூ-ஹீ-ஹே மற்றும் கிம் ஹீ-வான் மற்றும் யோனிம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் கடந்த ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியானது

2 / 6

ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் தனது ஸ்மார்ட்போனை தொலைக்கிறாள். தனது தோழி மூலம் தன்னுடைய போனுக்கு அழைக்கும்போது ஆண் ஒருவர் எடுத்துப் பேசி போனை குறிப்பிட்ட இடத்தில் வந்து வாங்கி கொள்ள சொல்கிறார்.

3 / 6

அதற்குள் அந்த நபர் அந்த ஸ்மார்ட்போனில் கண்காணிப்பு செயலி ஒன்றை நிறுவி அப்பெண்ணின் நடவடிக்கைகள் அனைத்தையும் கண்காணித்து அவளுக்கு பிரச்சினையை உண்டாக்குகிறான்.

4 / 6

வேலை பறிபோய், குடும்பத்தினர் சந்தேகிக்கும் நிலைக்கு அப்பெண் தள்ளப்பட்ட நிலையில் அதற்குள் அந்த நபருடன் நட்பை வளர்க்கும் சூழல் உண்டாகிறது. இதற்கிடையில் கொலை வழக்கு ஒன்றின் விசாரணையில் கொலையாளி அந்த நபர் என தெரியவருகிறது.

5 / 6

அதுமட்டுமல்லாமல் மேலும் 7 கொலை செய்துள்ள அந்த நபரின் அடுத்த டார்கெட் அப்பெண் தான் என தெரிந்து கொள்ளும் துப்பற்றியும் விசாரணை அதிகாரி அப்பெண்ணை காப்பாற்றினாரா இல்லையா என்பது தான் இப்படத்தின் கதையாகும்.

6 / 6

இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காண கிடைக்கிறது. சற்று மாறுபட்ட த்ரில்லர் படம் பார்க்க நினைப்பவர்கள் இதனைக் காணலாம்

Follow Us On
வெறும் வயிற்றில் இஞ்சி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
ஓணம் சத்யாவில் இடம்பெறும் உணவு வகைகள்
சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
நடிகை நிவேதா தாமஸ் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
Exit mobile version