இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா? - Tamil News | OTT Release Movies This Week May 6 to May 12 | TV9 Tamil

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?

Updated On: 

13 May 2024 16:40 PM

OTT Release Movies: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் ஒரு தொகுப்பு.

1 / 4இயக்குநர்

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் உருவான படம் ஆவேஷம். இதில் பகத் பாசில் உடன் மன்சூர் அலிகான், ஆஷிஷ் வித்யாத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த இப்படம் வரும் மே 9-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

2 / 4

‘கஜினிகாந்த்', ‘பொய்க்கால் குதிரை' உட்பட சில படங்களை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயக்குமார் அடுத்து இயக்கியுள்ள படம் 'தி பாய்ஸ்'. இப்படத்தில் ஷா ரா, கலக்கப் போவது யாரு வினோத், அர்ஷத், யுவராஜ், ஆர்யா, கிருஷ்ணா, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, ரோபோ சங்கர் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் இன்று முதல் ஆஹா ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது.

3 / 4

ஜிவி பிரகாஷ், இவான முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் கள்வன். கடந்த மாதம் திரையரங்கில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்தப் படம் மே 10 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

4 / 4

விஜய் ஆண்டனியின் வித்தியாசமான நடிப்பில், தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியான திரைப்படம் ரோமியோ. இந்த படத்தில் மிருணாளினி, யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மே 10 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாகிறது.

Follow Us On
இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version