Poonam kaur: ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..! - Tamil News | Poonam Kaur: The actress who has changed beyond recognition.. Fans are in shock..! | TV9 Tamil

Poonam kaur: ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Updated On: 

10 Jul 2024 01:24 AM

நெஞ்சிருக்கும் வரை படத்தில் நடிகர் நரேனுக்கு ஜோடியாக நடித்த நடிகை பூனம் கவுரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பூனம் கவுரின் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதன் பிறகு பயணம், அச்சாரம் என ஒரு சில தமிழ் படங்களில் நடித்த பூனம் கவுர் திருமணம் செய்துகொண்டு ஆன்மீகம் சார்ந்த விஷயங்களிலும், குடும்ப வாழ்க்கையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

1 / 8ஐதராபாத்தைச்

ஐதராபாத்தைச் சேர்ந்த நடிகை பூனம் கவுர், மாடலிங் துறையில் இருந்து வந்த நிலையில், கடந்த 2006ம் ஆண்டு மாயாஜாலம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார்.

2 / 8

எஸ்.எ. சந்திரசேகர் இயக்கத்தில் 2007ல் ஆம் ஆண்டு நடிகர் நரேனுக்கு ஜோடியாக நடித்த நெஞ்சிருக்கும் வரை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பூனம் கவுர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றார்.

3 / 8

முதல் படத்திலேயே தமிழக இளைஞர்களை கவர்ந்த பூனம் கவுர், அந்த படத்தின் மூலம் காதல் ஜோடிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கினர். அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு முறை பிறந்தேன் பாடல் இன்றளவும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

4 / 8

ஐதரபாத்தை சேர்ந்த நடிகை பூனம் கவுர், மாடலிங் துறையில் கலக்கி வந்த நிலையில், கல்லூரியில் சேர்ந்து படிக்க தொடங்கினார். பின்னர் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்ததால் தெலுங்கு படத்தில் அறிமுகமானார்

5 / 8

நெஞ்சிருக்கும் வரை திரைப்படத்தை தொடர்ந்து, பூனம் கவுரை ரசிகர்கள் தேடி வந்த நிலையில், பின்னர் அவர் நடித்த தமிழில் உன்னை போல் ஒருவன், பயணம், வெடி, என் வழி தனி வழி, அச்சாரம் உள்ளிட்ட படங்களில் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

6 / 8

தமிழ், தெலுங்கு திரையுலகில் படவாய்ப்புகள் கனிசமாக குறைந்த நிலையில், ஷாம் என்பவரை காதலித்து வந்த பூனம் கவுர் அவரை திருமணம் செய்து கொண்டார்.

7 / 8

நடிகை பூனம் கவுரின் தற்போதைய புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நடிகையா இவர் என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

8 / 8

பூனம் கவுர் ஃபைப்ரோமியால்ஜியா என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபகாலமாக தகவல்கள உலா வந்த நிலையில், சமூக வலைதளமான இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருக்கும் பூனம் கவுர் தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் இவரா? அவர் என்று அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!