‘சூக்ஷ்மதர்ஷினி’ படத்திலிருந்து வெளியானது ‘பிரியா லோகமே’ பாடல் வீடியோ
Priya Lokame - Video Song | படத்திற்கு இசையமைப்பாளர் கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த மாதம் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் படத்திலிருந்து ‘பிரியா லோகமே’ பாடலின் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
நடிகர்கள் நஸ்ரியா மற்றும் பேசில் ஜோசப்பின் நடிப்பில் உருவாகியுள்ள ‘சூக்ஷ்மதர்ஷினி’ படத்தில் இருந்து ‘பிரியா லோகமே’ பாடலின் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை நஸ்ரியா மீண்டும் மலையாள சினிமாவில் நடிப்பதற்கு என்ட்ரி கொடுத்துள்ளார். அறிமுக இயக்குநர் ஜித்தின் இயக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா உடன் இணைந்து நடிகர் பேசில் ஜோசப் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து தீபக் பரம்போல், மெரின் பிலிப், சித்தார்த் பரதன், பூஜா மோகன்ராஜ் அகில பார்கவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த மாதம் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் படத்திலிருந்து ‘பிரியா லோகமே’ பாடலின் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
Published on: Dec 04, 2024 03:30 PM
Latest Videos