5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

விக்ரமின் ‘தங்கலான்’ படம் எப்படி இருக்கு… முதல் விமர்சனம் இதோ!

Thangalaan First Review: பீரியட் படமாக உருவாகியுள்ள தங்கலான் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதுடன் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு முதல் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை , ஹைதராபாத் , மதுரை மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரமாண்டமாக மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நீண்ட காத்திருப்பிற்கு பிறகு சில தினங்களுக்கு முன்னர் தான் ‘தங்கலான்’ படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

விக்ரமின் ‘தங்கலான்’ படம் எப்படி இருக்கு… முதல் விமர்சனம் இதோ!
தங்கலான்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Aug 2024 06:37 AM

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ’தங்கலான்’ படத்தைப் பார்த்துள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. இதில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. பழங்குடியினரை மையமாக வைத்தும் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பா ரஞ்சித் செதுக்கியுள்ளார் என ட்ரெய்லரைப் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பீரியட் படமாக உருவாகியுள்ள தங்கலான் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதுடன் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு முதல் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை , ஹைதராபாத் , மதுரை மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரமாண்டமாக மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நீண்ட காத்திருப்பிற்கு பிறகு சில தினங்களுக்கு முன்னர் தான் ‘தங்கலான்’ படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

மேலும்,  ஜிவி இசையில் படத்திலிருந்து முதல் லிரிக்கல் வீடியோவை படக்குழு கடந்த ஜூலை 17-ம் தேதி வெளியிட்டது. மினிக்கி மினிக்கி என்ற இந்த பாடல் செலிப்ரேஷன் தீமில் உருவாகியுள்ளது.  சிந்தூரி விஷால் குரலில் ஒலிக்கும் அப்பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வைரலானது.

Also read… Cinema Rewind: இவங்கதான் தமிழ் சினிமாவின் எதிர்காலம் – தனுஷ் சொன்னது யார் தெரியுமா?

படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில் இதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. கடைசியாக ஜூன் 20-ம்தேதி வெளியாக இருப்பதாகக் கூறப்பட்டது. ஆகஸ்ட் 15-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியானது. இதனைப் படக்குழு உறுதி செய்யாமலே இருந்தது. இந்த நிலையில் கடந்த ஜூலை 19-ம் தேதி படத்தின் வெளியீட்டு தேதியை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வீடியோ வெளியிட்டு உறுதி செய்தார்.

இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். படத்தை பார்த்தவுடன் உடனடியாக விக்ரம் அண்ணா மற்றும் இயக்குனர் பா. ரஞ்சித் இருவருக்கும் போன் கால் செய்து பேசினேன். படத்தின் முதல் பாதி பார்க்கும்போதே, எனக்கு ஆனந்த் கண்ணீர் வந்துவிட்டது. இந்த மாதிரி திரைப்படத்தை நான் தயாரித்து இருக்கிறேன் என்பது பெருமையாக இருக்கிறது” என்று அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Latest News