Cinema Rewind: கமல் படத்துக்கு பெயர் வைத்த ரஜினி.. கேஎஸ் ரவிக்குமார் பகிர்ந்த விஷயம் - Tamil News | Rajini named kamals famous movie Thenali | TV9 Tamil

Cinema Rewind: கமல் படத்துக்கு பெயர் வைத்த ரஜினி.. கேஎஸ் ரவிக்குமார் பகிர்ந்த விஷயம்

Published: 

04 Jul 2024 17:11 PM

வரிசையாக படங்களை தங்கள் கைவசம் வைத்திருக்கும் இந்த இரு பெரும் ஜாம்பவான்களின் படங்களான இந்தியன் 2 மற்றும் வேட்டையன் அடுத்தடுத்து வெளியீட்டிற்கு வரிசையில் உள்ளது. அந்த வகையில் ரஜினி தற்போது இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்துள்ளார் கமல். இந்தப் படம் வருகின்ற 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Cinema Rewind: கமல் படத்துக்கு பெயர் வைத்த ரஜினி.. கேஎஸ் ரவிக்குமார் பகிர்ந்த விஷயம்

கமல். ரஜினி

Follow Us On

கமல் ஹாசனின் ஹிட் படத்திற்கு ரஜினிகாந்த் பெயர் வைத்தது குறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. பாரதிராஜா, விக்ரமன், நாகேஷ், ரங்கராஜ் உள்ளிட்ட பலருடன் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமாவை ஒட்டுமொத்தமாக கற்றுக்கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார் கே.எஸ்.ரவிக்குமார். தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குநராக வலம் வந்தவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். ரஜினி, கமல், அஜித், விஜய், பிரபு, சரத்குமார், சூர்யா, மாதவன் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் ஜாம்பவான் நடிகர்கள் பெரும்பாலானோரை இயக்கி அதில் வெற்றி கண்டவர்.  நாட்டாமை திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறி தமிழ்நாட்டு அரசின் சிறந்த திரைப்படம் மற்றும் இயக்குனர் விருதைப் பெற்றுத் தந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து முத்து, படையப்பா, லிங்கா போன்ற பல படங்களை இயக்கியவர் கே.எஸ். ரவிக்குமார்.

யார் சிறந்த நடிகர்கள் என்ற சண்டை நடிகர்களுக்குள் வருவதை விட யார் சிறந்த நடிகர்கள் என்ற சண்டை அவர்களின் ரசிகர்களிடையே தான் அதிகமாக காணப்பட்டது. தமிழ் சினிமாவில் முந்தைய காலத்தில் இருந்தே நடிகர்களிடையே போட்டி நிலவுவது வழக்கம். நடிகர்களுக்குள் இருக்கோ இல்லையோ அவர்களது ரசிகர்களுக்குள் அந்த போட்டி அதிகமாகவே இருந்தது. எம்.ஜி.ஆர் – சிவாஜி தொடங்கி, ரஜினி – கமல், அஜித் – விஜய், சிம்பு – தனுஷ் என இந்த போட்டி தொடந்து கொண்டே இருக்கிறது. இணையதள பயன்பாடு குறைவாக இருந்த காலத்தில் இந்த சண்டைகளும் குறைவாகவே இருந்தது. இணையதள பயன்பாடு அதிகரித்தப்பின் யார் பெரிய ஆள் என்று அடித்துக்காட்டு என்பது போல இணையதள போர்கள் அவ்வப்போது நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

Also read… ‘நாட்டு கூத்து’ நாயகன் எம்.எம்.கீரவாணிக்கு பிறந்த நாள்… சுவாரஸ்ய தகவல்கள்

இளம் நடிகர்களுக்கு போட்டியாக தொடர்ந்து படங்களை வெளியிட்டு வருகின்றனர் கமலும் ரஜினியும். சினிமா துறையில் 50 வருடங்களை கடந்தும் நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் இருவருமே தங்களது மாஸ் குறையாமல் இளம் நடிகர்களுடன் போட்டிப் போட்டு தங்களது இடத்தை யாருக்கும் கொடுக்க மாட்டோம் என்று நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வரிசையாக படங்களை தங்கள் கைவசம் வைத்திருக்கும் இந்த இரு பெரும் ஜாம்பவான்களின் படங்களான இந்தியன் 2 மற்றும் வேட்டையன் அடுத்தடுத்து வெளியீட்டிற்கு வரிசையில் உள்ளது. அந்த வகையில் ரஜினி தற்போது இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்துள்ளார் கமல். இந்தப் படம் வருகின்ற 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அது என்ன என்றால். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து சூப்பர் ஹிட் அடித்த படத்திற்கு நடிகர் ரஜினிதான் பெயர் வைத்துள்ளார் என்பது. கடந்த 2000-ம் ஆண்டு வெளியான படம் ’தெனாலி’. இந்தப் படத்தில் கமல்ஹாசன், ஜெயராம், தேவயானி, ஜோதிகா, ரமேஷ்கண்ணா என பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் வெளியாவதற்கு முன்னர் படத்தின் கதையை கேட்ட ரஜினி இந்தப் படத்திற்கு தெனாலி என பெயர் வைக்க சொல்லியுள்ளார். ஆனால் கமலிடம் இதனை சொல்ல வேண்டாம் படம் ஹிட் அடித்தப்பின் சொல்லிகோங்க என்றும் தெரிவித்துள்ளார். அதனையே கே.எஸ்.ரவிக்குமாரும் வைத்துள்ளார். படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பிறகு படத்தின் சில்வர் ஜூப்லி நிகழ்ச்சியின் போதுதான் கே.எஸ்.ரவிக்குமார் இதனை கமலிடம் கூறியுள்ளார். இதைக் கேட்ட கமல் ஆச்சரியப்பட்டதாகவும் கே.எஸ்.ரவிக்குமார் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version