நடிகர் ரஜினிகாந்த் இமயமலை ட்ரிப்.. கேதர்நாத் கோயிலில் வழிபாடு - Tamil News | Rajini-worship-at-kedarnath-temple-Himalaya | TV9 Tamil

நடிகர் ரஜினிகாந்த் இமயமலை ட்ரிப்.. கேதர்நாத் கோயிலில் வழிபாடு

Updated On: 

01 Jun 2024 12:32 PM

Actor Rajinikanth: ஒவ்வொரு வருடமும் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஆன்மிக சுற்றுப்பயணமாக இமயமலை செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் ரஜினிகாந்த், கரோனா பரவல் காரணமாக சில வருடங்கள் அங்கு செல்லாமல் இருந்தார். கடந்த வருடம் தனது நண்பர்களுடன் சென்றார். பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்ற அவர், அங்கு வழிபட்டார். அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாயின. இதை தொடர்ந்து வேட்டையன் படம் முடிவடைந்தது.

நடிகர் ரஜினிகாந்த் இமயமலை ட்ரிப்.. கேதர்நாத் கோயிலில் வழிபாடு

நடிகர் ரஜினி

Follow Us On

இமயமலையில் ஆன்மிக பயணத்தை தொடங்கியுள்ள ரஜினிகாந்த், ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு ஆசிரமத்தின் தலைமை சாமியாரை சந்தித்தார். மேலும் கேதார்னாத் மற்றும் பத்ரினாத் கோவில்களில் ரஜினிகாந்த வழிப்பட்டார். ஒவ்வொரு வருடமும் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஆன்மிக சுற்றுப்பயணமாக இமயமலை செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் ரஜினிகாந்த், கரோனா பரவல் காரணமாக சில வருடங்கள் அங்கு செல்லாமல் இருந்தார். கடந்த வருடம் தனது நண்பர்களுடன் சென்றார். பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்ற அவர், அங்கு வழிபட்டார். அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாயின. இதை தொடர்ந்து வேட்டையன் படம் முடிவடைந்தது.

இந்நிலையில் கடந்த 29-ம் தேதி அவர் தனது நண்பர்கள் ஸ்ரீஹரி உள்ளிட்டோருடன் இமயமலைக்கு சென்றார். அவர் இமயமலை கிளம்பினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “இப்போது ஒவ்வொரு வருடமும் இமயமலை செல்கிறேன். கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட ஆன்மிக தலங்களில் தரிசனம் செய்ய உள்ளேன். வேட்டையன் படம் சிறப்பாக வந்துள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

Also read… OTT Movies: ஓடிடி ரிலீஸ் படங்கள்.. இந்த வாரம் வெளியாகும் மூவிஸ் லிஸ்ட்!

தற்போது இமயமலையில் ஆன்மிக பயணத்தை தொடங்கியுள்ள ரஜினிகாந்த், ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு ஆசிரமத்தின் தலைமை சாமியாரை சந்தித்தார். பின்னர் பத்ரிநாத் சென்ற அவர் அங்குள்ள கோயிலில் வழிபட்டார். அவரை அங்கு சந்தித்த பக்தர்கள் பலர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர் அடுத்து, கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று வழிபட இருக்கிறார். ஜுன் 3 அல்லது 4-ம் தேதி சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்.

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version