Rajini: ‘கூலி’ பட ஷூட்டிங்… ஹைதராபாத் பறந்த ரஜினி!
Coolie Movie Update: நடிகர் ரஜினி நடிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ‘கூலி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ரஜினி நேற்று ஐதராபாத் கிளம்பிச் சென்றுள்ளார். கூலி படப்பிடிப்புக்காகவே ரஜினி ஐதராபாத் சென்றுள்ளதாகவும், இன்று முதல் படத்தின் ஷூட்டிங் தொடங்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினி தனது 171-வது படமான ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றுள்ளார். இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். கூட்டத்தில் ஒருத்தன், ஜெய் பீம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்தப் படத்தில் தனது போர்சனை ரஜினி நடித்து முடித்துள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டது. படம் தற்போது வெளியீட்டிற்காக தயாராகி வருகிறது. இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அடுத்து படத்துக்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சி நடைபெற உள்ளன.
இந்நிலையில் அடுத்ததாக தனது 171-வது படத்தில் கமிட்டாகி விறுவிறுப்பாக படத்தின் வேலையில் இறங்கியுள்ளார் ரஜினிகாந்த். நடிகர் ரஜினி நடிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ‘கூலி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக லோகேஷ் கனகாராஜ் படம் என்றாலே படம் LCU கனெக்ஷன் இருக்கா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புவது வழக்கம். அந்த வகையில் லோகேஷ் இயக்கத்தில் இறுதியாக வெளியான லியோ படம் அதற்கு முன் வெளியாக விக்ரம் படம் ஆகியவை கனெக்ஷனில் உள்ளது வெளிப்படுத்தியது.
அந்த படத்தை போல இதுவும் இருக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்து எழ தொடங்கிய நிலையில் அதற்கு லோகேஷ் பதிலளித்துள்ளார். அதில் LCU படங்களில் இடம் பெற்ற நடிகர்கள் கூலி படத்தில் இருப்பார்கள் ஆனால் இது LCU படம் கிடையாது என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் கூலி படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரம் தொடங்கும் என முன்னதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை என்பதால் படம் கைவிடப்பட்டதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகின.
Also read… Cinema Rewind: கமல் படத்துக்கு பெயர் வைத்த ரஜினி.. கேஎஸ் ரவிக்குமார் பகிர்ந்த விஷயம்
இதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் அமைந்தது. அந்த வகையில் லோகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்தார். அதில், கூலி படத்திற்காக ரஜினியின் லுக் டெஸ்ட் நடைபெற்றுள்ளது. மேலும் புது அப்டேட்டாக படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என அவர் குறிப்பிட்டிருந்தார். இதனைப் பார்த்த ரஜினியின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
இந்த நிலையில் ரஜினி நேற்று ஐதராபாத் கிளம்பிச் சென்றுள்ளார். கூலி படப்பிடிப்புக்காகவே ரஜினி ஐதராபாத் சென்றுள்ளதாகவும், இன்று முதல் படத்தின் ஷூட்டிங் தொடங்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. லோகேஷ் கனகராஜ்ஜும் அவரது குழுவினரும் ஏற்கனவே ஐதராபாத் சென்றுவிட்ட நிலையில், தற்போது ரஜினியும் சென்னையில் இருந்து விமானத்தில் அங்கு சென்றார்.