5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tirupati Laddu Controversy: திருப்பதி லட்டு விவகாரம்… கருத்து சொல்ல மறுத்த ரஜினி…!

Rajinikanth: வேட்டையன் படத்தை தொடர்ந்து தனது 171-வது படமாக கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தில் ரஜினியுடன், சவுபின் ஷாயிர், நாகர்ஜுனா, சுருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர். 'தேவா' என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.

Tirupati Laddu Controversy: திருப்பதி லட்டு விவகாரம்… கருத்து சொல்ல மறுத்த ரஜினி…!
ரஜினி
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 28 Sep 2024 16:02 PM

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்திடம் திருப்பதி லட்டு விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது கருத்து தெரிவிக்க மறுத்த  ‘மன்னித்துவிடுங்கள்’ என்று கூறி சென்றார். ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். கூட்டத்தில் ஒருத்தன், ஜெய் பீம் ஆகிய படங்களை இயக்கிய ஞானவேல் இப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தென் மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு மும்பை ராஜஸ்தான் பகுதிகளில் நடைபெற்றதை தொடர்ந்து படம் தற்போது அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஆந்திரா மாநிலம், கடப்பாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு சூட்டிங்கினை முடித்துவிட்டு, இமயமலைக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் பத்ரிநாத், கேதார்நாத் உள்பட பல்வேறு இடங்களுக்கு அவர் சென்று வந்தார். முன்னதாக மஞ்சுவாரியர், அபிராமி, துஷாராவைத் தொடர்ந்து ரித்திகா சிங் உட்படப் பலரும் டப்பிங் பேசிவிட்டனர். ரஜினி, கூலி படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால், அதில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வேட்டையன் படத்திற்கு டப்பிங் பேசுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் டப்பிங் பணியை முடித்தார்.

அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தில் போலி என்கவுண்டருக்கு எதிரான கதைக்களம் கையாளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கல்விக் கொள்கைக்கு ஆதரவான பல கருத்துக்களும் இந்த படத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் ரஜினிகாந்த் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த், வேட்டையன் திரைப்படத்தில் இஸ்லாமியராக நடிப்பதாக கூறப்படுகிறது. ரஜினி, ஏற்கனவே லால் சலாம் படத்தில் இஸ்லாமியராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also read… Meiyazhagan Movie Review: ’மெய்யழகன்’… நிஜமாவே அவ்வளவு அழகானவன் – விமர்சனம் இதோ!

படம் பற்றிய அறிவிப்பு வெளியான சில மாதங்களில் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. அதனைப் பார்த்தபோதே இந்தப் படம் கமர்ஷியல் ரீதியாகத்தான் உருவாகுமோ என்று சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பினார்கள். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் வேட்டையன் டீசரும் வெளியிடப்பட்டது. அதனைப் பார்க்கையில் இந்தப் படம் முழுக்க முழுக்க ஞானவேலுவின் ஸ்டைலில் இல்லாமல் ரஜினிக்காக கமர்ஷியல் பேக்கேஜாக உருவாகியிருப்பது உறுதியானது.

Also read… ஆஸ்கர் விருது பெற்ற ‘ஹாரி பாட்டர்’ நடிகை டேம் மேகி ஸ்மித் காலமானார்

இந்தப் படத்தை தொடர்ந்து தனது 171-வது படமாக கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தில் ரஜினியுடன், சவுபின் ஷாயிர், நாகர்ஜுனா, சுருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர். ‘தேவா’ என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.

தற்போது ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை விமானநிலையம் வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வேட்டையன் படம் குறித்து பேசியுள்ளார். ‘வேட்டையன் படம் எல்லா எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. வெளிநாடுகளிலும் வேட்டையன் படத்திற்கு முன்பதிவு நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ரஜினிகாந்திடம் திருப்பதி லட்டு விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது கருத்து தெரிவிக்க மறுத்த  ‘மன்னித்துவிடுங்கள்’ என்று கூறி சென்றார்.

Latest News