Rajinikanth: ரஜினி வெளியிட்ட திடீர் அறிக்கை.. நெகிழ்ந்து போன ரசிகர்கள்!
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆகத் திகழ்ந்து வருகிறார் ரஜினிகாந்த். 73 வயதாகும் அவர் கடந்த 14 ஆண்டுகளாகவே அவ்வப்போது உடல்நல குறைவால் அவதிப்பட்டு சிகிச்சை பெறுவது வழக்கம். ஆனாலும் இந்த வயதிலும் அவரின் சுறுசுறுப்பும், வேகமான செயல்பாடும் அனைத்து வயதினருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கக்கூடியது என்றே சொல்லலாம். இதனிடையே வேட்டையன் படத்தில் நடித்துள்ள ரஜினி அடுத்ததாக கூலி படத்தில் நடித்து வருகிறார்.
ரஜினிகாந்த்: உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” நான் மருத்துவமனையில் இருக்கும் போது சீக்கிரம் உடல் நலம் பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் நான் நலம் பெற பிரார்த்தனைகள் செய்து மனதார வாழ்த்திய என் மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் நடிகர் அமிதாப் பச்சன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
— Rajinikanth (@rajinikanth) October 4, 2024
ரஜினிகாந்துக்கு என்ன ஆச்சு?
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆகத் திகழ்ந்து வருகிறார் ரஜினிகாந்த். 73 வயதாகும் அவர் கடந்த 14 ஆண்டுகளாகவே அவ்வப்போது உடல்நல குறைவால் அவதிப்பட்டு சிகிச்சை பெறுவது வழக்கம். ஆனாலும் இந்த வயதிலும் அவரின் சுறுசுறுப்பும், வேகமான செயல்பாடும் அனைத்து வயதினருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கக்கூடியது என்றே சொல்லலாம். இதனிடையே வேட்டையன் படத்தில் நடித்துள்ள ரஜினி அடுத்ததாக கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி இரவு உடல்நலக் குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார்.
Also Read: TVK Party: “அரசியல்வாதியை நம்ப முடியாது” – விஜய்யை அட்டாக் செய்த தமிழிசை!
நள்ளிரவில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அக்டோபர் 1 ஆம் தேதி காலையில் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியாகியது. இதனைக் கண்டு ரசிகர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர் உடல்நிலை குறித்த பல்வேறு விதமான தகவல்களும் பரவ ஆரம்பித்தது. இதனால் ரசிகர்கள் சற்று கலக்கமடைந்தனர். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் இருந்து ரத்தம் வெளியேறும் பகுதியில் உள்ள ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை இல்லாத முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பிரச்சனை சரி செய்யப்பட்டது.
இப்படியான நிலையில் ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் சமூக வலைதளங்களிலும் தொலைபேசி வாயிலாகவும் தெரிவித்திருந்தனர். இப்படியான நிலையில் கடந்த 3 நாட்களாக மருத்துவமனை கண்காணிப்பில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாக சொன்ன மருத்துவர்கள் நேற்று இரவு அவரை டிஸ்சார்ஜ் செய்தனர். நள்ளிரவு 12 மணியளவில் அவர் வீடு திரும்பியதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனால் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
Also Read: Israel: ”தேவைப்பட்டால் ஆக்ஷன் தான்”.. இஸ்ரேல், அமெரிக்காவுக்கு அயதுல்லா அலிகமேனி எச்சரிக்கை!
வேட்டையன் படம்
இதனுடைய நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படமாக வேட்டையன் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அமிதாப்பச்சன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ரக்ஷன், துஷாரா விஜயன், பகத் பாசில், ராணா டகுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகியிருந்தது. அதற்கான அறிவிப்பு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. இதனால் ட்ரெய்லரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கிடைத்ததும் மிகுந்த சோகமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் எப்போதும் தன் படங்கள் வெளியாகும் போது ரஜினிகாந்த் இமயமலைக்கு செல்வது வழக்கமான நிகழ்வாகும். ஆனால் தற்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் இந்த முறை அவர் இமயமலை செல்வாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.