கூலி பட சிக்கல்.. இளையராஜா நோட்டீஸ் குறித்து ரஜினிகாந்த் கருத்து
Rajinikanth: கூலி திரைப்படத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் அது தொடர்பாக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ’கூலி’ (Coolie) திரைப்படம் உருவாகி வருகிறது.இப்படத்தின் டைட்டில் வீடியோ சமீபத்தில் வெளியானது.
அந்த வீடியோவில் இளையராஜாவின் பழைய இசையும் பயன்படுத்தப்பட்டது. இதனையடுத்து, கூலி திரைப்படத்தின் டீசரில் தன்னுடைய இசையை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார்.
அந்த நோட்டீசில், ’கூலி படத்தின் டீசரில் இடம் பெற்ற வா வா பக்கம் வா என்ற பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Also Read: சத்தமில்லாமல் நடந்து முடிந்த நடிகர் ஜெயராம் மகளின் திருமணம்… வைரலாகும் போட்டோஸ்!
அந்த பாடலின் இசைக்கு உரிய அனுமதி பெறவில்லை. அதற்கான அனுமதியை தயாரிப்பு நிறுவனம் பெற வேண்டும். அல்லது டீசரிலிருந்து அந்த இசையை நீக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நிபந்தனையை செய்ய தவறினால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அனைத்து உரிமையும் இருப்பதாக இளையராஜா தரப்பு குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் மும்பையில் வேட்டையன் பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினியிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், அது தயாரிப்பாளருக்கும், இசையமைப்பாளருக்கும் இடையேயுள்ள பிரச்னை என்றார். மேலும், வேட்டையன் படம் 80% முடிவடைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.