Vettaiyan Booking: முதல் காட்சி கூட ஹவுஸ்ஃபுல் இல்ல.. வேட்டையனுக்கு என்ன ஆச்சு? - Tamil News | Rajinikanth Starrer vettaiyan movie first day first show ticket booking results here | TV9 Tamil

Vettaiyan Booking: முதல் காட்சி கூட ஹவுஸ்ஃபுல் இல்ல.. வேட்டையனுக்கு என்ன ஆச்சு?

ரஜினி படம் வெளியானால் ஊழியர்களுக்கு டிக்கெட்டுகள் உள்ளிட்ட செலவுகளுக்கு பணம் கொடுத்து விடுமுறை தரும் நிறுவனங்களும் உண்டு. ஆனால் வேட்டையன் படம் தமிழ்நாட்டைப் பொறுத்து சென்னையை தவிர மற்ற ஊர்களில் உள்ள தியேட்டர்கள் முதல் நாள் முதல் காட்சி கூட ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. டிக்கெட் நியூ, புக் மை ஷோ போன்ற டிக்கெட் முன்பதிவு வலைத்தளங்களை பார்த்தாலும் அதில் சில தியேட்டர்களில் பாதி இருக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளது.

Vettaiyan Booking: முதல் காட்சி கூட ஹவுஸ்ஃபுல் இல்ல.. வேட்டையனுக்கு என்ன ஆச்சு?

கோப்பு புகைப்படம்

Published: 

10 Oct 2024 07:25 AM

வேட்டையன் புக்கிங்: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படம் இன்று வெளியாகியுள்ளது. இது அவரின் 170வது படமாகும். ஜெய்பீம் படம் மூலம் தமிழ் சினிமா மக்களின் கவனத்தை ஈர்த்த த.செ.ஞானவேல் ரஜினியின் அடுத்தப்படத்தை இயக்கப்போகிறார் என்றதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இது எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்ற கேள்வி அனைவருக்குள்ளும் எழுந்தது. அதுமட்டுமல்லாமல் லைகா நிறுவனம் தயாரிப்பு, அனிருத் இசை என கூட்டணியும் அமர்க்களமாக இருந்தால் ஷூட்டிங் தொடங்கும்போதே எப்படா படம் ரிலீசாகும் என எண்ண வைத்தது. அனைவரின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் வேட்டையன் படம் ஆயுத பூஜை விடுமுறைக்கு வெளியாகியுள்ளது.

வழக்கமாக ரஜினி படம் என்றாலே மிகப்பெரிய அளவில் தியேட்டர்கள் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். டிக்கெட்டுகள் கிடைக்காமல் பலரும் பிளாக்கில் அதிகவிலை கொடுத்து டிக்கெட் பெறுவார்கள். ரஜினியின் படம் கண்டிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் காணும் நோக்கி வன்முறை, ஆபாசம் இல்லாமல் இருக்கும் என்பதால் முதல் காட்சியில் கூட குடும்பமாக வருபவர்களும் உண்டு. அதேசமயம் ரஜினி படம் வெளியானால் ஊழியர்களுக்கு டிக்கெட்டுகள் உள்ளிட்ட செலவுகளுக்கு பணம் கொடுத்து விடுமுறை தரும் நிறுவனங்களும் உண்டு. ஆனால் வேட்டையன் படம் தமிழ்நாட்டைப் பொறுத்து சென்னையை தவிர மற்ற ஊர்களில் உள்ள தியேட்டர்கள் முதல் நாள் முதல் காட்சி கூட ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. டிக்கெட் நியூ, புக் மை ஷோ போன்ற டிக்கெட் முன்பதிவு வலைத்தளங்களை பார்த்தாலும் அதில் சில தியேட்டர்களில் பாதி இருக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளது.

Also Read: Vettaiyan Review: ரஜினியின் வேட்டையன் மிரட்டலா? சொதப்பலா? – விமர்சனம் இதோ!

என்ன காரணம்?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அந்த வகையில் வேட்டையன் படம் தமிழ்நாட்டில் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் திரையிடப்படுகிறது. அதேசமயம் கேரளாவில் 7 மணிக்கும், கர்நாடகாவில் அதிகாலை 4  மணிக்கும் முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் படத்தை அதிகாலையிலேயே பார்த்து விட வேண்டும் என்ற நோக்கில் மாநில எல்லையில் உள்ள ரசிகர்கள் கேரளா, கர்நாடகா தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் ஆயுத பூஜைக்கான நாளை முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் நவராத்திரி வழிபாடு, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாட்டம் இருப்பதால் அதுதொடர்பான பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதால் முதல் நாள் டிக்கெட் முன்பதிவில் சறுக்கல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் சரஸ்வதி பூஜை தொடங்கி அக்டோபர் 13 ஞாயிற்றுக்கிழமை வரை டிக்கெட் முன்பதிவு மிகப்பெரிய அளவில் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: Vettaiyan Movie Release: ரஜினியின் வேட்டையன் படத்தை ஏன் பார்க்க வேண்டும்? – இதைப் படிங்க!

படத்தில் அமிதாப்பச்சன், ராணா டகுபதி, ஃபஹத் ஃபாசில், ரித்திகா சிங்,மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், கிஷோர் குமார், அபிராமி, ரோகிணி, ஜி.எம்.சுந்தர் என பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது அமிதாப்பச்சனுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் டப்பிங் கொடுத்திருந்தார். ஆனால் அமிதாப்பச்சன் குரல் அனைத்து மாநில மக்களுக்கு நன்கு பரீட்சையமானது என்பதால் ஏஐ தொழில்நுட்பம் மூலம் அவரை குரலை டப்பிங் பேசியதாக மாற்றியுள்ளனர். மேலும் மனசிலாயோ பாடலில் மறைந்த பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியுள்ளனர். அவருக்கான பாடல் வரிகளை மகன் யுகேந்திரன் வாசுதேவன் பாடியிருந்தார். வேட்டையன் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிவி பழம் தினசரி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
வெறும் வயிற்றில் பால் குடிக்கலாமா? அப்படி குடித்தால் என்ன ஆகும்?
டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட் இதோ!
ஹேப்பி பர்த்டே அக்‌ஷரா ஹாசன்...
Exit mobile version