வேட்டையன் படத்திற்கு எதிரான வழக்கு… மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

'வேட்டையன்' படத்தை வெளியிட தடை விதிக்க கோரி ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில் "வேட்டையன் படத்தில் என்கவுன்டரை ஆதரிப்பது போல காட்சிகளும் வசனங்களும் வருகின்றன. எனவே படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்டர் தொடர்பான வசனங்களை நீக்க அல்லது மியூட் செய்ய வேண்டும். அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பழனிவேலு என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

வேட்டையன் படத்திற்கு எதிரான வழக்கு... மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வேட்டையன்

Updated On: 

12 Nov 2024 15:39 PM

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடியான உத்தரவை பிரப்பித்துள்ளது. “வேட்டையன் படத்தில் என்கவுன்டரை ஆதரிப்பது போல காட்சிகளும் வசனங்களும் வருகின்றன. எனவே படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்டர் தொடர்பான வசனங்களை நீக்க அல்லது மியூட் செய்ய வேண்டும். அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பழனிவேலு என்பவர் வழக்கு தொடர்ந்தார். ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். கூட்டத்தில் ஒருத்தன், ஜெய் பீம் ஆகிய படங்களை இயக்கிய ஞானவேல் இப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தென் மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு மும்பை ராஜஸ்தான் பகுதிகளில் நடைபெற்றதை தொடர்ந்து படம் தற்போது அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மேலும் கல்விக் கொள்கைக்கு ஆதரவான பல கருத்துக்களும் இந்த படத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் ரஜினிகாந்த் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த், வேட்டையன் திரைப்படத்தில் இஸ்லாமியராக நடிப்பதாக கூறப்படுகிறது. ரஜினி, ஏற்கனவே லால் சலாம் படத்தில் இஸ்லாமியராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also read… பாராட்டிய பவன் கல்யாண்… நன்றி தெரிவித்த யோகி பாபு

இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த நிலையில், ‘வேட்டையன்’ படத்தை வெளியிட தடை விதிக்க கோரி ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில் “வேட்டையன் படத்தில் என்கவுன்டரை ஆதரிப்பது போல காட்சிகளும் வசனங்களும் வருகின்றன. எனவே படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்டர் தொடர்பான வசனங்களை நீக்க அல்லது மியூட் செய்ய வேண்டும். அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பழனிவேலு என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றம் ‘வேட்டையன்’ படத்துக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம், லைகா நிறுவனம் மற்றும் தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

Also read… சமந்தா விவாகரத்தில் அமைச்சரின் கருத்து… கொந்தளித்த பிரபலங்கள்

முன்னதாக கடந்த மாதம் 20-ம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைப்பெற்றது. இந்த விழாவில் ரஜினி போசியது கோலிவுட்டில் தற்போது வைரலாகி வருகின்றது. அவர் பேசியதாவது, “சகுனிகள் இருக்கிற இந்த சமுதாயத்தில் நல்லவனா இருந்தா பிழைக்க முடியாதுங்க. கொஞ்சம்ன் சாணக்கியத்தனமும், சாமர்த்தியமும் வேணும். உங்ககிட்ட சாணக்கியத்தனமும் இருக்கு, சாமர்த்தியமும் இருக்கு என்று இயக்குநர் ஞானவேல் குறித்து பேசியுள்ளார்.

இந்நிலையில் வேட்டையன் திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு யூ/ஏ (U/A) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வேட்டையன் படத்தை வரும் அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் பட்டியல்..!