கடல் பாறையில் அமர்ந்து யோகா செய்த போது விபத்து.. உயிரிழந்த இளம் நடிகை!
இந்த பாறை கடற்கரை என் வாழ்க்கையில் நான் பார்த்த சிறந்த விஷயம். பிரபஞ்சமே, என்னை இங்கே இருக்க அனுமதித்ததற்கு நன்றி. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றும் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்துக்கு சுற்றுழா சென்ற இடத்தில் பிரபல ரஷ்ய நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா கடல் பாறையில் அமர்ந்து யோகா செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத அலை ஒன்று அடித்து நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயாவை கடலுக்குள் இழுத்துச் சென்றதால் அவர் உயிரிழந்ததாக தகால்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 24 வயதான நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா தனது காதலனுடன் தாய்லந்திற்கு விடுமுறையை கழிக்க சென்றுள்ளார். கடற்கரையில் அலைகளை ரசிப்பதற்காவும் அங்கு உள்ள பாறை மீது அமர்ந்து யோகா செய்வதற்காவும் அங்கு சென்றுள்ளனர். அப்படி அவர் யோகா செய்துக்கொண்டிருந்த போது ராட்சத அலை ஒன்று அடித்து அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது.
இந்த நிகழ்வு நடப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு அவர் கடற்கரையில் உள்ள ஒரு பாறையில் அமைதியாக தியானம் செய்வதை வீடியோவாக படம்பிடித்துள்ளார். மீட்புக் குழுவினர், கமிலா அடித்துச் செல்லப்பட்ட இடத்தில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் அவரது உடலைக் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை பிரபல செய்தி நிறுவனமான டெய்லி மெயில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
நடிகை கமிலாவிற்கு தாய்லாந்தில் உள்ள கோ ஸ்யாமுய் கடல் மீது அதிக காதல் கொண்டவராக இருந்துள்ளார். சுற்றுழா செல்லும் போதெல்லாம் அதிகமா அந்த கடற்கரைக்கு செல்வார் என்று கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் நடிகை கமிலா அந்த இடத்தை தனது வீடு மற்றும் பூமியின் சிறந்த இடம் என்றும் முன்னதாக சிலாகித்துள்ளார்.
Also read… ஹிந்தியில் காஜல் அகர்வால் அறிமுகமான படம் ’சிங்கம்’ இல்லையாம்… வைரலாகும் தகவல்
அவரது இதயத்திற்கு நெருக்கமான அந்த கடலை மிகவும் நேசிக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த பாறை கடற்கரை என் வாழ்க்கையில் நான் பார்த்த சிறந்த விஷயம். பிரபஞ்சமே, என்னை இங்கே இருக்க அனுமதித்ததற்கு நன்றி. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றும் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Also read… ஓடிடியில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ படைத்த சாதனை… கொண்டாடும் ரசிகர்கள்
இந்த விபத்து நடைப்பெற்று, அவசர அழைப்பைப் பெற்ற மீட்புக் குழுவினர் 15 நிமிடங்களில் அங்கு வந்து உடனடி நடவடிக்கை எடுத்த போதிலும், கடுமையான கடல் சீற்றம் காரணமாக கமிலாவைக் காப்பாற்ற முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மீட்பு மையத்தின் தலைவர் சாயபோர்ன் சப்பிரசேர்ட் (Chaiyaporn Subprasert) பேசியுள்ளதாவது, “மழைக்காலத்தில், நாங்கள் தொடர்ந்து சுற்றுலா பயணிகளை எச்சரிக்கிறோம், குறிப்பாக சாவெங் கடற்கரை (Chaweng) மற்றும் லமாய் கடற்கரைகள் (Lamai) போன்ற அதிக ஆபத்துள்ள பகுதிகளில், சிவப்பு கொடிகள் அந்த பகுதியில் நீச்சல் செய்யக்கூடது என்பதைக் குறிக்கிறது.” கமிலா தங்கியிருந்த இருப்பிடம் நீச்சல் பகுதி இல்லையென்றாலும், எதிர்பாராத அலை அவரை இழுத்து சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.