படப்பிடிப்பில் சமந்தாவிற்கு விபத்து… வைரலாகும் போட்டோ!
சமந்தா தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி ராஜ் & டிகே இயக்கும் சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்திருக்கும் அவர் அடுத்ததாக தமிழில் சில படங்களிலும் நடிப்பதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து படங்களில் கமிட்டாகியிருக்கும் அவர் மும்முரமாக ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் ஒரு படப்படிப்பு தளத்தில் அவருக்கு விபத்து ஏற்பட்டு முட்டியில் அடிபட்டிருக்கிறது.
நடிகை சமந்தாவுக்கு படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டதாக வெளியான போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகினரின் கவனத்தைப் பெற்றவர் நடிகை சமந்தா. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் நானியுடன் ‘நான் ஈ’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் கியூட் நாயகியாக வலம் வரத் தொடங்கினார். பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா என அவர்களுக்கு நாயகியாக நடிக்கத் தொடங்கினார் சமந்தா. இவரது நடிப்பில் தமிழில் வெளியான் கத்தி, நீதானே என் பொன் வசந்தம், அஞ்சான், தெறி உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு தமிழ், தெலுங்கு என பான் இந்திய மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் சமந்தா.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது அதில் ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவை காதலித்தார். கடந்த 2017-ஆம் ஆண்டு பிரம்மாணடமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணமும் 4 ஆண்டுகளில் தோல்வியில் முடிந்தது. 2021-ம் ஆண்டு சமந்தா – நாக சைதன்யா இருவரும் தங்கள் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
திருமணத்திற்கு பிறகும் அதிக கிளாமரான காட்சிகளில் சமந்தா நடிக்க நாக சைதன்யா விரும்பாததால் இருவரும் பிரிந்ததாக தகவல்கள் வெளியாகின. தாயாக வேண்டாம் என்று சமந்த இந்த முடிவை எடுத்ததாகவும் பல விமர்சனங்களை சினிமா வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் எதிர்கொண்டார் சமந்தா. எனினும் சர்ச்சைகளையும் வதந்திகளையும் பொருட்படுத்தாமல் வெப் சீரிஸ், படங்கள் என படு பிசியாக வலம் வந்தார் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு சமந்தா அறிவித்தார். அது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இதற்கிடையே திரைப்படங்களில் நடித்துக்கொண்டே சிகிச்சை பெற்று வந்தார் சமந்தா. ஆனால் ஒரு கட்டத்தில் திரைப்படங்களில் இருந்து விலகி சிகிச்சையில் கவனம் செலுத்த தொடங்கினார்.
Also read… பிரபல நடிகை… பிக்பாஸ் பிரபலம்… யார் இந்த சிறுமி!
சமந்தா இப்போது தன்னுடைய முடிவிலிருந்து வெளியே வந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி ராஜ் & டிகே இயக்கும் சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்திருக்கும் அவர் அடுத்ததாக தமிழில் சில படங்களிலும் நடிப்பதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து படங்களில் கமிட்டாகியிருக்கும் அவர் மும்முரமாக ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் ஒரு படப்படிப்பு தளத்தில் அவருக்கு விபத்து ஏற்பட்டு முட்டியில் அடிபட்டிருக்கிறது.
தனது காயம் குறித்து இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த சமந்தா, “காயம் இல்லாமல் நான் ஆக்ஷன் ஸ்டாராக மாற முடியுமா” என்ற கேப்ஷனை குறிப்பிட்டுள்ளார். சமந்தாவின் இந்த பதிவை தொடர்ந்து அவரது ரசிகர்களும், நலம் விரும்பிகளும் ஆரோக்கியத்தில், உடல் நலத்தில் கவனம் செலுத்துமாறு கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.