Santhosh Narayanan: பாலிவுட்டுக்கு செல்லும் சந்தோஷ் நாராயணன்.. அனிருத்துக்கு போட்டியா?
Sikandar Movie : தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குநர்களின் பட்டியலில் முன்னிலை வகிப்பவர் ஏ.ஆர்.முருகதாஸ். 1997ம் ஆண்டில் ரட்சகன் திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி அறிமுகமான இவர். தற்போது முன்னணி நடிகர்களை வைத்துப் பல திரைப்படங்களை இயக்கி வெற்றி நாயகனாக இருந்து வருகிறார்.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக நடிகர் ரஜினியை வைத்து தர்பார் திரைப்படத்தினை இயக்கினார். இதைத் தொடர்ந்து 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் தற்போது சிவகார்த்திகேயனின் நடிப்பில் SK23 திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். அதேசமயம் இந்தியில் சல்மான்கானுடன் “சிக்கந்தர்” என்ற திரைப்படத்திலும் இணைந்துள்ளார். கஜினி திரைப்படத்தின் ரீமேக் மூலம் இந்தியில் இயக்குநராக அறிமுகமாகிய முருகதாஸ். தொடர்ந்து ஜெய் ஹோ, ஹாலிடே மற்றும் அகிரா போன்ற திரைப்படங்களை இந்தியிலும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது சல்மான்கானின் முன்னணி நடிப்பில் சிக்கந்தர் என்ற இந்தி மொழி படத்தையும் இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மாதம் மும்பையில தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து இப்படத்திற்கு தற்போது சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதையும் படிங்க:தனுஷ் ரசிகர்களுக்கு குட்நியூஸ் சொன்ன ஜி.வி. பிரகாஷ்.. சூப்பர் அப்டேட்!
இந்தியில் சிக்கந்தர் திரைப்படத்தில் இசையமைக்கும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்:
இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த திரைப்படமானது பழமையான புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் சல்மான்கானுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் மூலம் நடிகர் சல்மான் கானும் மற்றும் தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:அஜித் படத்துக்கு அடுத்து ‘மார்க் ஆண்டனி 2’ படமா? ஆதிக் ரவிச்சந்திரன் பிளான் இதுதான்!
இப்படத்தில் சல்மான் கான் மற்றும் ராஷ்மிகாவுடன் மேலும் நடிகை காஜல் அகர்வால், சுனில் மற்றும் சத்யராஜ் எனப் பலரும் இப்படத்தில் இணைத்து நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மாதம் மும்பையில் உள்ள ரயில் நிலையத்தில் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
புராண கதைக்களத்துடன் உருவாகிவரும் இப்படமானது வரும் 2025ம் ஆண்டில் ரம்ஜானுடன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. முற்றிலும் ஆக்ஷ்ன் மற்றும் மாறுபட்ட திரைகதைளுடன் உருவாகிவரும் இப்படத்திற்காக தற்போது இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் தேவரா படத்தின் பாடல்கள் இந்தியில் பிரபலமானதை ஒட்டி தற்போது, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் இந்தி சினிமாவில் இசையமைப்பாளராக சிக்கந்தர் திரைப்படத்திற்காக இசையமைக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் குறித்து அதிகாரப்பூர்வமான செய்திகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனிருத்துக்கு போட்டியாக சந்தோஷ் நாராயணன் வருவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க:இணையத்தில் கவனம் பெறும் SK25 படத்தின் பூஜை வீடியோ!