Actress Rani: சோகங்கள் நிறைந்த சீரியல் வில்லி ராணியின் கதை தெரியுமா?

Tamil Serials: சொர்க்கம் என்ற சீரியலில் நடித்தேன். அப்போது அதில் மௌனிகாவை டார்ச்சர் செய்யும் காட்சிகள் இருந்தது. வெளிப்புறத்தில் ஒரு கோயில் அருகே அந்த சீரியலில் ஷூட்டிங் நடந்தது. மௌனிகாவை டார்ச்சர் பண்ணுவியா என கேட்டு ஒரு ஊரே என்னை அடிக்க வந்தார்கள். நான் காரில் போய் ஒளிந்துக்கொண்டேன். மேலும் பல சீரியல்களில் நான் வில்லியாகத்தான் நடித்தேன் என ராணி கூறியுள்ளார்.

Actress Rani: சோகங்கள் நிறைந்த சீரியல் வில்லி ராணியின் கதை தெரியுமா?

கோப்பு புகைப்படம்

Published: 

03 Aug 2024 12:16 PM

நடிகை ராணி: சின்னத்திரையில் வரும் சில கேரக்டர்களுக்கு இந்த நடிகை தான் சரியாக இருப்பார்கள். அவரை போட்டிருக்கலாம் என நம்மையே சில பிரபலங்கள் யோசிக்க வைத்து விடுவார்கள். அதில் ஒருவர் தான் நடிகை ராணி. அலை என்ற சீரியல் மூலம் நடிப்பில் அறிமுகமான அவர், “சொந்தம், அத்திப்பூக்கள், சந்திரலேகா, வள்ளி, முன் ஜென்மம், பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, குல தெய்வம், ரோஜா”  என ஏகப்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். சீரியல்களில் வில்லி கேரக்டர்களுக்கு என தனி இலக்கணம் வகுத்தவர் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடம் அன்பையும், வெறுப்பையும் ஒரே நேரத்தில் சம்பாதித்தவர். இவர் கடந்த வந்த வாழ்க்கை மிகவும் கடினமான ஒன்று. அதனைப் பற்றி காணலாம்.

Also Read:  Aadi Amavasai: ஆடி அமாவாசை நாளில் இதெல்லாம் செய்யாதீங்க!

நேர்காணலில் தன்னுடைய கடினமான வாழ்க்கைப் பற்றி நடிகை ராணி நிறைய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது, “என்னுடைய அம்மா தான் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமானவர். அவர் என்னை சின்ன வயதிலேயே ட்யூன் பண்ணி வைத்து விட்டார். எதில் என்றாலும் ஒரு சரியான பங்களிப்பு இருக்க வேண்டும் என சொல்லிக்கொடுத்தார். அதுதான் சீரியலில் நடிக்க காரணமாக அமைந்தது. ஆனால் நான் கல்லூரி படித்துக்கொண்டு இருக்கும்போது அம்மா இறந்து விட்டார். வீட்டில் சகோதரிகள் இருந்ததால் நான் கல்லூரி படிக்கும்போதே திருமணம் செய்துக் கொண்டேன். இதனால் என்னால் டிகிரி கூட முடியாமல் போனது. மகன் பிறந்த பிறகு தான் சீரியலில் நடிக்க ஆரம்பித்தேன். நான் இப்போது வரை நடிக்க கடவுளின் அருள் தான் எல்லாவற்றுக்கும் காரணம் என நினைக்கிறேன்.

அதேசமயம் என்னுடைய அப்பா என் வாழ்க்கையில் படிப்பு, கல்யாணம், குழந்தைகள் என எதையும் பார்க்கவில்லை. நான் பள்ளி படிக்கும்போதே அவர் இறந்து விட்டார். எல்லாரும் முடிந்த வரை அப்பா, அம்மாவுடன் இருக்க வேண்டும். அவர் இருந்திருந்தால் நாங்கள் அனைவரும் சினிமாவில் இருந்திருப்போம். கண்டிப்பாக சீரியலில் நடித்திருக்க மாட்டோம். அப்பா இல்லாததால் விரைவில் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்தார்கள்.

Also Read: Cinema Rewind: எம்.எஸ்.விஸ்வநாதன் தினமும் கேட்ட சீரியல் பாட்டு எது தெரியுமா?

ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்னால் சொர்க்கம் என்ற சீரியலில் நடித்தேன். அப்போது அதில் மௌனிகாவை டார்ச்சர் செய்யும் காட்சிகள் இருந்தது. வெளிப்புறத்தில் ஒரு கோயில் அருகே அந்த சீரியலில் ஷூட்டிங் நடந்தது. மௌனிகாவை டார்ச்சர் பண்ணுவியா என கேட்டு ஒரு ஊரே என்னை அடிக்க வந்தார்கள். நான் காரில் போய் ஒளிந்துக்கொண்டேன். மேலும் பல சீரியல்களில் நான் வில்லியாகத்தான் நடித்தேன். அந்த நெகட்டிவ் கேரக்டர்களுக்காக நான் ஒருநாளும் வருத்தப்பட்டதில்லை. எந்த கேரக்டர் என்றாலும் அதில் நான் ராணி போல தெரிய வேண்டும் என நினைப்பேன் என அவர் கூறியுள்ளார்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!