கணவரின் முதலாம் ஆண்டு நினைவு தினம்… சீரியல் நடிகையின் உருக்கமான பதிவு
Serial actress Shruti Shanmuga priya: கடந்த 2022ம் ஆண்டு மே மாதத்தில் தனது நீண்ட நாள் காதலர் அரவிந்தை ஸ்ருதி ஷண்முகப்பிரியா திருமணம் செய்து கொண்டார். ஸ்ருதியின் கணவர் அரவிந்த் ஒரு பாடி பில்டர். தன்னுடைய பிட்னசில் அதிக கவனம் செலுத்தி வந்தார். திருமணத்திற்கு பிறகு ஸ்ருதி மற்றும் அரவிந்த் இருவரும் இணைந்து பல ரீல்ஸ் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தனர், இதன்மூலம் ஏராளமான ஃபாலோயர்களையும் பெற்ற நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அரவிந்த் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.
நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா தனது கணவரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. சன் டிவியில் ஒளிபரப்பான ’நாதஸ்வரம்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் ஸ்ருதி சண்முகப்பிரியா. இந்த சீரியலில் கோபியின் இரண்டாவது தங்கையாக ராகிணி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து ராதிகாவுடன் வாணி ராணி கல்யாண பரிசு விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியலிகளில் நடித்து பிரபலமான இவருக்கு சின்னத்திரையில் பல ரசிகர்கள் உள்ளனர். அதிலும் இவரது முதல் சீரியலான நாதஸ்வரம் இவருக்கு பலரின் பாராட்டுக்களை பெற்று தந்தது. சீரியல்களில் நடித்துக் கொண்டே தனது கல்லூரி படிப்பையும் முடித்தார். சின்னத்திரை மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் ஸ்ருதி ஷண்முகப்பிரியா.
கடந்த 2022ம் ஆண்டு மே மாதத்தில் தனது நீண்ட நாள் காதலர் அரவிந்தை ஸ்ருதி ஷண்முகப்பிரியா திருமணம் செய்து கொண்டார். ஸ்ருதியின் கணவர் அரவிந்த் ஒரு பாடி பில்டர். தன்னுடைய பிட்னசில் அதிக கவனம் செலுத்தி வந்தார். திருமணத்திற்கு பிறகு ஸ்ருதி மற்றும் அரவிந்த் இருவரும் இணைந்து பல ரீல்ஸ் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தனர், இதன்மூலம் ஏராளமான ஃபாலோயர்களையும் பெற்ற நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அரவிந்த் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.
Also read… ’மஞ்சும்மல் பாய்ஸ்’ பஞ்சாயத்து ஓவர்… இழப்பீடு பெற்ற இளையராஜா – எவ்வளவு தெரியுமா?
திருமணமான ஒரு வருடத்திலேயே அவரது கணவர் இறந்தது ஸ்ருதி ஷண்முகப்பிரியா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அரவிந்த் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். கல்யாணம் ஆன ஒரே வருடத்தில் அரவிந்த் உயிரிழந்ததை அடுத்து ஸ்ருதி மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி வீட்டிலேயே முடங்கினார். இதனிடையே தற்போது கணவரை இழந்து தனிமையில் இருந்த நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா தற்போது மீண்டும் சின்னத்திரையில் என்டரி உள்ளார். அதன்படி சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள லட்சுமி சீரியலில் ஸ்ருதி முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
View this post on Instagram
இந்த நிலையில் கணவர் உயிர் இழந்து ஒரு வருடம் ஆண நிலையில் ஸ்ருதி ஷண்முகப்பிரியா பதிவு ஒன்றை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தன்னுடைய உயிர் உள்ளவரை தான் அரவிந்தின் ஸ்ருதி என்றும் அதேபோல அரவிந்த் தன்னுடையவர் என்றும் அவர் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், மரணமே பயந்திடும் தூரத்தில் நாமும் வாழ்கின்றோம் மனித நிலை தாண்டிபோகிறோம் இனி நமக்கென்றும் பிரிவில்லையே! என அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.