5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி… சோகத்தில் ரசிகர்கள்!

Shah Rukh Khan: நடிகர் ஷாருக்கான் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக்கானின் உடல்நிலை குறித்த அறிவிப்புகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரின் தீவிர ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி… சோகத்தில் ரசிகர்கள்!
நடிகர் ஷாருக்கான்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 23 May 2024 10:42 AM

நடிகர் ஷாருக்கான் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தீயாய் பரவி வருகின்றது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். இந்நிலையில் கொல்கத்தா, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய குவாலிஃபயர் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த செவ்வாய் அன்று நடந்தது. போட்டியைக் காண ஷாருகான் அகமதாபாத் சென்றிருந்தார். நடிகர் ஷாருகான், அகமதாபாத்தில் நிலவும் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நீரிழப்பு நோயால் அவதிப்பட்டார் என்றும், அவர் உடல்நிலை தற்போது சீராக இருந்தாலும் மருத்துவக் கண்காணிப்பில் அவர் உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரசிகர்கள் ஷாருக்கானை பார்ப்பதற்காக மருத்துவமையை சுற்றி கூட்டம் கூடுவதால் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

ஷாருக்கான் கடந்த வருடம் பதான், ஜவான், டன்கி ஆகிய படங்களில் நடித்திருந்தார். சித்தார்த் ஆனந்த் இயக்கிய பதான் படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நான்கு ஆண்டுகளுக்கு பின்பு ஷாருக்கான் நடித்திருந்ததால் அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கியது. படத்தின் சிங்கிள் பாடல் வெளியானபோது அதில் தீபிகா படுகோன் அணிந்திருந்த உடையின் நிறத்தை வைத்து ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Also read… ரூ.1000 கோடி வசூலித்த மலையாள படங்கள்.. தடுமாறும் தமிழ்.. 5 மாத சினிமா ரீவைண்ட்!

அதனை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்தார் ஷாருக்கான். படத்துக்கு தமிழ்நாட்டில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் வட மாநிலங்களில் பலத்த வரவேற்பு கிடைத்தது. படமும் ஆயிரம் கோடி ரூபாய்வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்தப் படத்தை தொடர்ந்து டங்கி படத்தில் நடித்தார் ஷாருக்கான். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனைப் படைத்தது. கடந்த ஆண்டு தொடர்ந்து மூன்று படங்களின் ஹிட் கொடுத்து சாதனைப் படத்தார் ஷாருக்கார். மேலும் அவரது ரசிகர்களும் அதனை கொண்டாடி தீர்த்தனர்.

இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக்கானின் உடல்நிலை குறித்த அறிவிப்புகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரின் தீவிர ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Latest News