பாலிவுட்டில் ரீமேக்காகும் ‘பரியேறும் பெருமாள்’… ரிலீஸ் எப்போ தெரியுமா? - Tamil News | Siddhant Chaturvedi Triptii Dimri to star in Dhadak 2 based on Pariyerum Perumal movie | TV9 Tamil

பாலிவுட்டில் ரீமேக்காகும் ‘பரியேறும் பெருமாள்’… ரிலீஸ் எப்போ தெரியுமா?

Published: 

29 May 2024 11:55 AM

Dhadak 2: பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் இந்த படத்தை தயாரித்திருந்தார். பரியேறும் பெருமாள் படத்தில் கதைக்களத்துடன் ஒத்துப்போவதால் 'தடக்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக 'தடக் 2' என்ற பெயரில் பரியேறும் பெருமாள் படம் இந்தியில் ரீமேக்காக உள்ளது என்ற அறிவிப்பை கரண் ஜோகர் வெளியிட்டுள்ளார். இதில் சித்தாந்த் சதுர்வேதி மற்றும் திரிப்தி டிம்ரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாலிவுட்டில் ரீமேக்காகும் பரியேறும் பெருமாள்... ரிலீஸ் எப்போ தெரியுமா?

தடக் 2

Follow Us On

கடந்த 2018-ம் ஆண்டு இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்குநராக அறிகுமனான படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்தப் படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு, இயக்குநர் மாரிமுத்து, பூ ராமு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைக்க இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்தது. சாதி பிரச்சினையைப் பேசியிருந்த இப்படம் விமர்சன ரீதியாக பலரது பாராட்டையும் பெற்றது. மேலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் மாரி செல்வராஜின் முதல் படமே இப்படி இருக்கிறது என்று பெரும்பான்மையான மக்கள் அவரை பாராட்டினர். படத்தில் சாதிய வன்முறை குறித்து மாரி செல்வராஜ் பேசியது ஒவ்வொரு மனிதனின் சுயத்தையும் கேள்வி கேட்க வைத்தது. அதனை தொடர்ந்து கர்ணன், மாமன்னன், வாழை படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் ‘பைசன்’ என்ற படத்தை இயக்க உள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு இஷான் கட்டர் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான இந்திப் படம் ‘தடக்’. இந்தப் படம் மூலம் ஜான்வி கபூர் இந்தியில் நடிகையாக அறிமுகமானார். இது மராத்தியில் நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் வெளியான ‘சாய்ரட்’ படத்தின் தழுவலாக உருவானது.

Also read… ”இது நம்மளோட போராட்டாம்”… நீட் தேர்வுக்கு எதிரான ‘அஞ்சாமை’ பட ட்ரெய்லர்

பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் இந்த படத்தை தயாரித்திருந்தார். பரியேறும் பெருமாள் படத்தில் கதைக்களத்துடன் ஒத்துப்போவதால் ‘தடக்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘தடக் 2’ என்ற பெயரில் பரியேறும் பெருமாள் படம் இந்தியில் ரீமேக்காக உள்ளது என்ற அறிவிப்பை கரண் ஜோகர் வெளியிட்டுள்ளார். இதில் சித்தாந்த் சதுர்வேதி மற்றும் திரிப்தி டிம்ரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

தர்மா புரொடக்ஷன் சார்பில் கரண் ஜோஹர் படத்தை தயாரிக்கிறார். இப்படம் நவம்பர் மாதம் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ள கரண் ஜோஹர், “ஒரு காலத்தில் ஒரு ராஜா இருந்தார். ஒரு ராணி இருந்தார். அவர்கள் வெவ்வேறு சாதிகளை சேர்ந்தவர்களாக இருந்தனர்” எனப் பதிவிடப்பட்டுள்ளார்.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version