SIIMA Awards 2024: விருதைப் பெற்ற தென்னிந்திய திரைப்பிரபலங்கள் யார் யார் தெரியுமா? - Tamil News | SIIMA 2024 South Indian Actors And Stars Award Winning List, SIIMA Award Winning Actors | TV9 Tamil

SIIMA Awards 2024: விருதைப் பெற்ற தென்னிந்திய திரைப்பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

Updated On: 

17 Sep 2024 14:29 PM

SIIMA 2024: சைமா 2024 கடந்த செப்டம்பர் 15ல் துபாயில் நடைபெற்றது. அதில் தென்னிந்திய நடிகர் மற்றும் நடிகைகள் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். சிறந்த நடிகர், நடிகை, பாடலாசிரியர், படம் என பல்வேறு கேட்டகிரியில் விருதுகள் கொடுக்கப்பட்டன. ரஜினி நடித்த ஜெயிலர் படம் அதிக விருதுகளை பல்வேறு பிரிவுகளில் வாங்கியது. அதேபோல சில அறிமுக கலைஞர்களையும் விருது சென்றடைந்துள்ளது. இந்த விருது விழாவில் யாருக்கெல்லாம் விருது வழங்கப்பட்டது என்பதை பார்க்கலாம்

SIIMA Awards 2024: விருதைப் பெற்ற தென்னிந்திய திரைப்பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

சைமா விருது விழாவில் நடிகர்கள்

Follow Us On

SIIMA 2024: ஆண்டுதோறும் நடைபெறும் தென்னிந்தியப் பிரபலங்களைப் பெருமை சேர்க்கும் விருதான சைமா 2024 கடந்த செப்டம்பர் 15ல் துபாயில் நடைபெற்றது. அதில் தென்னிந்திய நடிகர் மற்றும் நடிகைகள் பலர் கலந்துகொண்டனர். தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் இந்த விழாவில் விருதுகளை வாங்கிக்குவித்தனர்.  2023ல் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் விக்ரமிற்கு வழங்கப்பட்டுள்ளது. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில்  நடித்தற்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகை:

2023ல் சிறந்த நடிகைக்கான விருது, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் நடித்த அன்னபூரணி படத்தில் சிறந்த கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த அறிமுக நடிகை:

2023ல் சிறந்த அறிமுக நடிகைக்கான விருது இயக்குநர் ரா.மந்திர மூர்த்தி இயக்கத்தில் வெளியான அயோத்தி படத்தில்  நடித்திருந்த நடிகை ப்ரீத்தி அஞ்சு அஸ்ரானிக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த காமெடி நடிகர்:

2023ல் சிறந்த நகைச்சுவையாளர்க்கான விருதை நடிகரும் நகைச்சுவையாளர் ’யோகி பாபு” பெற்றுள்ளார்.

சிறந்த படம் மற்றும் இயக்குநர்

சிறந்த படத்திற்கான விருது இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான  “ஜெய்லர்” படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த கிரிட்டிக்ஸ் நடிகர்

கிரிட்டிக்ஸில் சிறந்த நடிகருக்கான விருதினை நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான  “மாவீரன்” என்ற திரைப்படத்தில்  நடித்ததற்காக இவ்விருதை வழங்கியுள்ளனர்.

சிறந்த கிரிட்டிக்ஸ் நடிகை

2023ல் சிறந்த கிரிட்டிக்ஸ் நடிகைக்கான விருதினை நடிகை ”ஐஸ்வர்யா ராய்க்கு” வழங்கியுள்ளது. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான  “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இவ்விருதை வழங்கியுள்ளனர்

சிறந்த அறிமுக இயக்குநர்:

கடந்த 2023ல்  அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் போன்ற நடிகர்கள் நடிப்பில் வெளியான  ”போர் தொழில்” திரைப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜாவிற்குச் சிறந்த அறிமுக இயக்குநர்க்கான விருதை வழங்கியுள்ளனர்.

சிறந்த துணை நடிகர்

சிறந்த துணை நடிகர்க்கான விருது ஜெய்லர் படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்த நடிகர் ”வசந்த் குமாருக்கு”  சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகை

கடந்த ஆண்டில் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் வெளியான மாவீரன் படத்தில் நடித்தற்காக 2023ல் சிறந்த துணை நடிகைக்கான விருது நடிகை ”சரிதாவிற்கு” வழங்கப்பட்டது.

சிறந்த பாடலாசிரியர்

2023 ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியர்க்கான விருது ஜெய்லர் படத்தில் இடம் பெற்றுள்ள ”ரத்தமாரே” என்ற பாடலை எழுதிய இயக்குநரும் தற்போது பாடலாசிரியருமான விக்னேஷ் சிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த பாடகர்

இந்த  ஆண்டிற்கான சிறந்த பாடகர்க்கான விருது இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான ”குட் நைட்” திரைப்படத்தில் உள்ள “நான் காலி” என்ற பாடலைப்பாடிய “ஷான்க்கு” சிறந்த பாடகர்க்கான விருது வழங்கப்பட்டது.

சிறந்த ஒளிப்பதிவாளர்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ”மாமன்னன்” திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான தேனீஸ்வர்க்கு சிறந்த ஒளிப்பதிவாளர்க்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version