5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Bigg Boss Tamil : பிக் பாஸ் அடுத்த தொகுப்பாளர் யார் தெரியுமா? கமல் இடத்துக்கு அடிபடும் புது பெயர்கள்.. வெளியான தகவல்!

முதல் சீசனில் ஆரவ் கோப்பையை வென்றார், அதே சமயம் ரித்விகா இரண்டாவது சீசனில் பாடகர் மற்றும் நடிகர் முகேன் ராவ் மூன்றாவது சீசனையும், நடிகர்கள் ஆரி அர்ஜுனா மற்றும் ராஜு ஜெயமோகன் நான்காவது மற்றும் ஐந்தாவது சீசனில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். ஆறாவது மற்றும் ஏழாவது சீசனில் அசீம் மற்றும் அர்ச்சனா வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்களின் பார்வை மொத்தமும் நிகழ்ச்சி போட்டியாளர்களின் தேர்வு பட்டியலின் பக்கம் சென்றது.

Bigg Boss Tamil : பிக் பாஸ் அடுத்த தொகுப்பாளர் யார் தெரியுமா? கமல் இடத்துக்கு அடிபடும் புது பெயர்கள்.. வெளியான தகவல்!
பிக் பாஸ்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Aug 2024 06:45 AM

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தான் இனி தொகுத்து வழங்கவில்லை என நடிகர் கமல் ஹாசன் கூறிய பிறகு அடுத்ததாக யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற தகவல் இணையத்தில் தற்போது பேசு பொருளாக உள்ளது. விஜய் டிவியின் பிக்பாஸ்  நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நட்சத்திரங்கள் இதுவரை தொகுத்து வழங்கி வந்துள்ளனர். தமிழில் 7 சீசன்கள் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக 8-வது சீசனுக்கான தகவல்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஓடிடியில் வெளியான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கினார்.

இந்திய அளவில் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் பிரபலமான தொடர், பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. பல தரப்பு பிரபலங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பலரின் கவனத்தை கவர்ந்துள்ளனர்.

முதல் சீசனில் ஆரவ் கோப்பையை வென்றார், அதே சமயம் ரித்விகா இரண்டாவது சீசனில் பாடகர் மற்றும் நடிகர் முகேன் ராவ் மூன்றாவது சீசனையும், நடிகர்கள் ஆரி அர்ஜுனா மற்றும் ராஜு ஜெயமோகன் நான்காவது மற்றும் ஐந்தாவது சீசனில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். ஆறாவது மற்றும் ஏழாவது சீசனில் அசீம் மற்றும் அர்ச்சனா வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்களின் பார்வை மொத்தமும் நிகழ்ச்சி போட்டியாளர்களின் தேர்வு பட்டியலின் பக்கம் சென்றது.

Also read… Actor Suriya : விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யா.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த அசம்பாவிதம்.. உடல்நிலை இப்போ எப்படி இருக்கு?

பிக்பாஸ் 8 நிகழ்ச்சி இந்த செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கமல் ஹாசான் இனிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை தான் தொகுத்து வழங்கப் போவதில்லை என்பதை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, “அன்பான பார்வையாளர்களே, 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பிக்பாஸ் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முன்னதாகவே நான் ஏற்றுக்கொண்ட சில திரைப்பட பணிகள் காரணமாக, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நான் தற்பொழுது பிக் பாஸில் இருந்து விலகுகிறேன். ஆகவே எதிர்வரும் பிக் பாஸ் சீசனை நான் தொகுத்து வழங்க முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியின் மூலமாக என் மீது அன்பு மழை பொழிந்த எனது ரசிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தற்போது யார் இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்று இணையத்தில் சில தகவல்கள் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிம்பு அல்லது விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Latest News