5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஹெட்போன் உஷார்.. செவித்திறன் குறைபாடு குறித்து பிரபல பாடகி வேதனைப் பதிவு!

Singer Alka Yagnik: தமிழ், உட்பட 25மொழிகளில் ஒன்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். தமிழில், ஓரம்போ படத்தில் ‘இது என்ன மாயம்’, ‘வாய்மை’யில்‘கண்படும் உன் முகம்’ ஆகிய பாடல்களை பாடியிருக்கிறார். இதனிடையே அல்கா யாக்னிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஹெட்போன் உஷார்.. செவித்திறன் குறைபாடு குறித்து பிரபல பாடகி வேதனைப் பதிவு!
அல்கா யாக்னிக்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 19 Jun 2024 11:45 AM

பிரபல பாடகியான அல்கா யாக்னி தனக்கு அரிய வகை செவித்திறன் குறைபாடு இருப்பதாக தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இந்தி திரைப்பட பாடகி அல்கா யாக்னிக். இந்தியில், 80 மற்றும் 90-களில் பிரபலமான ‘ஏக் தோ தீன்’, ‘சோலி கே பீச்சே கியாஹே’ உட்படபல சூப்பர் பாடல்களை பாடியுள்ளார். தமிழ், உட்பட 25மொழிகளில் ஒன்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். தமிழில், ஓரம்போ படத்தில் ‘இது என்ன மாயம்’, ‘வாய்மை’யில்‘கண்படும் உன் முகம்’ ஆகிய பாடல்களை பாடியிருக்கிறார். இதனிடையே அல்கா யாக்னிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அதன் கீழ் மிகவும் முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில், கடந்த சில நாட்கள் முன்பு விமானத்தில் இருந்து நான் வெளியேறினேன் . அப்போது திடீரென்று  என்னால் எதையும் கேட்க முடியவில்லை. என்னுடைய நண்பர்கள் மற்றும் ரசிகர்களுடம் இந்த தகவலை நான் பகிர்ந்துகொள்ள முடிவெடுத்திருக்கிறேன். என் மருத்துவர்கள் எனக்கு அரிய வகை நரம்பியல் வழி செவித்திறன் பாதிப்பு இருப்பதாக கண்டறிந்துள்ளார்கள்.

Also read… Sarfira: ’சூரரைப் போற்று’ இந்தி ரீமேக் ‘சர்ஃபிரா’ ட்ரெய்லர் இதோ!

 

View this post on Instagram

 

A post shared by Alka Yagnik (@therealalkayagnik)

இந்த செவித்திறன் குறைபாடு ஒருவகை வைரசால் ஏற்படக்கூடிய குறைபாடு. எனக்கு இப்படியான ஒரு பாதிப்பு வரும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இந்த நிலையில் இருந்து மீண்டு வர இதனை நிதானமாகவே கையால நினைக்கின்றேன். இதிலிருந்து நான் விரைவில் குணமாகி வெளிவர எனக்காக நீங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள். எனது நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். என் ரசிகர்கள் மற்றும் இளம் பாடகர்களுக்கு ஒரு எச்சரிக்கை. ஹெட்போன்களில் பாடல்களை அதிக சத்தமாக வைத்து கேட்பதை தவிர்த்து விடுங்கள் என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

அல்கா யாக்னிக் பாதிக்கப் பட்டிருப்பது மிகவும் அரிய வகையான நோய் என்றும், இது ஒரு லட்சத்தில் 5 முதல் 20 நபர்கள் இந்த பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Latest News