வயதாகி அடையாளமே தெரியாமல் மாறிய பாடகர் ஹரிஹரன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ
Hariharan: சமீபத்தில் கேரளாவில் கோழிக்கோட்டில் நடந்த இசை நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் பக்கம் அமர்ந்து இருந்த ஹரிஹரனை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. பின்னர் மேடைக்கு சென்ற ஹரிஹரன் அங்கு உள்ளவர்களிடம் தான் பாடல்களைப் பாடவேண்டும் என்று கேட்க மேடையில் இருந்தவர்களுக்கும் ஹரிஹரனை அடையாளம் காண இயலவில்லை.
வயதான தோற்றத்தில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய பிரபல பாடகர் ஹரிஹரனின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் பாடகர் ஹரிஹரன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படங்களில் பின்னணி பாடல்களைப் பாடியுள்ளார். பாடகர் ஹரிஹரன் 1992 ஆம் ஆண்டு ரோஜா என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். ’தமிழா தமிழா நாளை’ என்ற பாடலைதான் பாடினார். இத்திரைப்படம் இசையமப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கும் அறிமுகப் படம் என்பது குறிப்பிடதக்கது. அதனை தொடர்ந்து பல படங்களில் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடகர் ஹரிஹரன் தொடந்து பல பாடல்களை பாடியுள்ளார். அது மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
தமிழ் சினிமாவில் பாடகர் ஹரிஹரன் 90களில் தனது குரலால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசம்படுத்தி வைத்திருந்தார். ஹரிஹரனின் பல பாடல்கள் தற்போது உள்ள 2k கிட்ஸ்களும் ரசித்து விரும்பி கேட்டு வருகின்றனர். இவரது குரலில் என்ன பாடல் பிடிக்கும் என்று கேட்டால் எந்த ஒரு ரசிகராலும் ஒரு பாடலை மட்டும் சொல்லிவிட்டு நகர முடியாது. பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
அந்த வகையில் இவரது குரலில் வெளியான அன்பே அன்பே கொள்ளாதே, என்னை தாலாட்ட வருவாளா, இரவா பகலா, சந்திரனை தொட்டது யார், ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ.. என அவரது எவர்கிரீன் பாடல்களை பட்டியலிட்டால் லிஸ்ட் நீண்டுக் கொண்டே செல்லும். அத்தனை சூப்பர் ஹிட் பாடல்களை ஹரிஹரன் பாடியுள்ளார்.
Also read… தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் நவ.27-ல் தீர்ப்பு!
குறிப்பாக 500-க்கும் அதிகமான தமிழ்ப்பாடல்களையும் 200-க்கும் அதிகமான இந்திப் பாடல்களையும் பாடி பிரபலமான பாடகர் ஹரிஹரனுக்கு இந்தியா முழுக்க ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். இந்திய அரசு கடந்த 2004-ம் ஆண்டு பத்மஸ்ரீ என்னும் உயரிய விருதை இவருக்கு அளித்தது. அது மட்டும் இன்றி பல மாநில அரசு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
69 வயதாகும் பாடகர் ஹரிஹரன் தற்போதும் இசைக் கச்சேரிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பாடிய பாடல் வீடியோ வெளியாகி அவரது தோற்றத்தைப் பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
Also read… Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் பல்லக்குகாக ஏற்படும் சலசலப்பு… வைரலாகும் வீடியோ
சமீபத்தில் கேரளாவில் கோழிக்கோட்டில் நடந்த இசை நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் பக்கம் அமர்ந்து இருந்த ஹரிஹரனை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. பின்னர் மேடைக்கு சென்ற ஹரிஹரன் அங்கு உள்ளவர்களிடம் தான் பாடல்களைப் பாடவேண்டும் என்று கேட்க மேடையில் இருந்தவர்களுக்கும் ஹரிஹரனை அடையாளம் காண இயலவில்லை.
தன்னுடைய மகன் அருணை காணவில்லை என்றும் அவனை தேடித்தர வேண்டும் என்று மேடையில் கேட்கிறார். அப்போது அவர் பாடல் பாடினால் அருண் வருவான் என்று கூற மைக்கை அவரிடம் கொடுக்கிறார்கள். அப்போது பாடல் பாடத் தெரியாதது போல நடிக்கிறார். மேடையில் உள்ளவர்கள் சிரித்துக்கொண்டே ஸ்ருதி வேணுமா என்று கேட்கிறார்கள்.
Singer Hariharan making fun on stage. pic.twitter.com/Pv2HQfQZek
— அரிஸ்டாடில் (@TamilTweeper) November 13, 2024
ஆமாம் என்று கூறிய ஹரிஹரன் அதனை தொடர்ந்து காதலுக்கு மரியாதை படத்தில் அவர் பாடிய ‘என்னைத் தாலாட்ட வருவாளா’ என்ற பாடலை பாடியதும் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆர்ப்பரித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.