பாப் பாடகர் லியாம் பெய்ன் ஹோட்டல் பால்கனியில் இருந்து தவறி விழுந்து மரணம்… ரசிகர்கள் வேதனை - Tamil News | singer Liam Payne died after falling from Buenos Aires hotel balcony | TV9 Tamil

பாப் பாடகர் லியாம் பெய்ன் ஹோட்டல் பால்கனியில் இருந்து தவறி விழுந்து மரணம்… ரசிகர்கள் வேதனை

லியாம் பெய்ன், தனது தோழியுடன் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி முதல் அர்ஜெண்டினாவில் விடுமுறையை செலவிட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி அவரது தோழி அர்ஜெண்டினாவில் இருந்து சென்றுள்ளார். பின்னர் வேறொரு விடுதியில் லியாம் பெய்ன் அறை எடுத்து தங்கியுள்ளார்.  அங்கு 1டி குழு நண்பரின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்ததாக கூறப்படுகிறது. 

பாப் பாடகர் லியாம் பெய்ன் ஹோட்டல் பால்கனியில் இருந்து தவறி விழுந்து மரணம்... ரசிகர்கள் வேதனை

பாப் பாடகர் லியாம் பெய்ன்

Updated On: 

17 Oct 2024 23:19 PM

பிரபல பாப் பாடகர் லியாம் பெய்ன் ஹோட்டல் பால்கனியில் இருந்து தவறி விழுந்த உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் எத்தனையோ இசைக்க குழுக்கள் இருந்தாலும் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. இந்த சூழலில், சர்வதேச அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட One Direction பாப் இசைக்குழு உலகப் புகழ் பெற்ற இசைக்க குழுவாகும். ரசிகர்களால், இந்த இசைக்குழு 1D என்று சுருக்கமாக அழைக்கப் படுகிறது. ஒன் டைரக்‌ஷன் (1டி) என்ற பாப் இசைக் குழுவின் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த லியாம் பெய்ன் பிரபலமானார். கடந்த 2008 முதல் அவர் இசைத்துறையில் இயங்கி வருகிறார். பிரிட்டிஷ் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் ஒளிபரப்பான ‘தி எக்ஸ் ஃபேக்டர்’ மூலமாக வாய்ப்பு பெற்றவர். பின்னர் தனியாக பாடல்களை வெளியிட்டார். ஆர்&பி ஜானரிலும் அவர் தேர்ந்தவர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த லியம் பெய்ன் 2008ம் ஆண்டு முதலே இசைத்துறையில் இருக்கிறார். பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் தி எக்ஸ் ஃபேக்டர்’ மூலம் முதல் வாய்ப்பை அவர் பெற்றார். லியம் பெய்னின் ‘வாட் மேக்ஸ் யூ பியூட்டிஃபுல்’ WHAT MAKES YOU BEAUTIFUL என்ற பாடலே One Direction னில் அவரது முதல் தனிப்பாடலாகும். இந்த ஒரு பாடலால் , அந்த இசைக்குழுவே ஒரே இரவில் உலக அளவில் பிரபலமானது.

Also read… Theatre Release Movies: நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

லியாம் பெய்ன், தனது தோழியுடன் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி முதல் அர்ஜெண்டினாவில் விடுமுறையை செலவிட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி அவரது தோழி அர்ஜெண்டினாவில் இருந்து சென்றுள்ளார். பின்னர் வேறொரு விடுதியில் லியாம் பெய்ன் அறை எடுத்து தங்கியுள்ளார்.  அங்கு 1டி குழு நண்பரின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்ததாக கூறப்படுகிறது.

Also read… கங்குவா பட புரமோஷன் போது ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட சூர்யா!

இந்த சூழலில் நேற்று புதன்கிழமை (அக்.16) மாலை விடுதியின் லாபியில் ஆண் ஒருவர் ஆக்ரோஷத்துடன் நடந்து கொள்வதாக அவசர உதவி எண்ணுக்கு புகார் சென்றுள்ளது. அது லியாம் தான் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சொல்லியதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்த தனது அறையின் பால்கனியில் இருந்து கீழே விழுந்து லியாம் பெய்ன் உயிரிழந்துள்ளார். இது தற்கொலையா அல்லது போதையில் தவறி விழுந்தாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக பியூனஸ் அயர்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் லியாம் உயிரிழந்த ஹோட்டல் விடுதியின் வாசலில் மெழுவர்த்தி ஏற்றி அவரது ரசிகர்கள் தங்களது சோகத்தை வெளிபடுத்துவதுடன் அவரது இறப்பிற்கான காரணத்தை போலீஸ் விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

பான் இந்திய நடிகை இந்த குழந்தை...
நாளை தியேட்டரில் என்னென்ன படங்கள் ரீலீஸ் தெரியுமா?
குழந்தைகளுக்கு அடிக்கடி ஏன் வயிற்று உப்பசம் ஏற்படுது தெரியுமா?
தேங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...