Diwali Release: ஜெயம் ரவி படம் தீபாவளி ரிலீஸ்.. கடுப்பில் சிவகார்த்தியேன் ரசிகர்கள்! - Tamil News | Jayam Ravi, Brother Movie, Amaran, Sivakarthikeyen | TV9 Tamil

Diwali Release: ஜெயம் ரவி படம் தீபாவளி ரிலீஸ்.. கடுப்பில் சிவகார்த்தியேன் ரசிகர்கள்!

Updated On: 

27 Sep 2024 13:16 PM

Jayam Ravi: பிரதர் படம் அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்க்கும் வகையில் பொழுதுபோக்கு படமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் 2, சைரன், இறைவன், அகிலன் என அடுத்தடுத்து தோல்வி படங்களில் நடித்த ஜெயம் ரவிக்கு பிரதர் வெற்றிப்படமாக அமைய வேண்டும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

Diwali Release: ஜெயம் ரவி படம் தீபாவளி ரிலீஸ்.. கடுப்பில் சிவகார்த்தியேன் ரசிகர்கள்!

கோப்பு புகைப்படம்

Follow Us On

தீபாவளி படங்கள்: தமிழ் சினிமாவில் பண்டிகை கால படங்கள் என்றாலே புதுவித சந்தோஷம் தான். எந்தவித பண்டிகையாக இருந்தாலும் புதுப்படம் பார்க்காமல் அன்றைய தினம் ஓயாது என்பது போல குடும்பத்துடன் அனைவரும் தியேட்டருக்கு படையெடுப்போம். இப்படிப்பட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே பண்டிகை கால படங்கள் என்பது குறைந்து விட்டது. ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லாம் குறைந்த 5 அல்லது 6 படங்கள் பண்டிகைக்கு ரிலீசாகும். எந்த படத்துக்கு எந்த தியேட்டர் கிடைக்கும் என்பது பெரிய போராக நடக்கும். ஆனால் இப்போதெல்லாம் ஒன்று அல்லது இரண்டு படங்கள் மட்டுமே பெரிதாக வெளியாகிறது. அதுவும் சில நேரங்களில் சின்ன நடிகர்களின் படங்களாக போனால் நிச்சயம் ஏமாற்றம் தான். அப்படியாக 2024 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ள படங்களில் மேலும் ஒரு படம் இணைந்துள்ளது.

இதையும் படிங்க: Actress Rani: சோகங்கள் நிறைந்த சீரியல் வில்லி ராணியின் கதை தெரியுமா?

ஜெயம் ரவியின் பிரதர்

சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன், வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, ஆல் இன் ஆல் அழகுராஜா, மான் கராத்தே உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் எம்.ராஜேஷ். இவர் சில காலம் இடைவெளிக்குப் பின் மீண்டும் இயக்கி வரும் படம் “பிரதர்”. இந்த படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி, சரண்யா பொன்வண்ணன், சீதா என பலரும் நடித்துள்ளனர்.  ஸ்கீரின் சீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் பிரதர் படம் அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்க்கும் வகையில் பொழுதுபோக்கு படமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் 2, சைரன், இறைவன், அகிலன் என அடுத்தடுத்து தோல்வி படங்களில் நடித்த ஜெயம் ரவிக்கு பிரதர் வெற்றிப்படமாக அமைய வேண்டும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: Cinema Rewind: எம்.எஸ்.விஸ்வநாதன் தினமும் கேட்ட சீரியல் பாட்டு எது தெரியுமா?

கடுப்பில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

இந்நிலையில் ஏற்கனவே அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள அமரன் படமும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்று கதையை அடிப்படையாக கொண்ட இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரித்துள்ளார். சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அதேசமயம் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படமும் தீபாவளிக்கு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இதனால் கடும் நெருக்கடி இருக்கும் என்பதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version