5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Amaran Review: சிவகார்த்திகேயனின் அமரன் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

அமரன் விமர்சனம்: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.

Amaran Review: சிவகார்த்திகேயனின் அமரன் படம் எப்படி இருக்கு?  விமர்சனம் இதோ!
அமரன்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 31 Oct 2024 08:11 AM

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் தியேட்டர் விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இந்தப் படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

அமரன் படம் எப்படி இருக்கும்?

இப்படி ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியான போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. நீண்ட நாட்களாக அவரின் தோற்றம் வெளிவராத நிலையில், தற்போது வெளியாகி உள்ள பாடல்கள், டீசர், ட்ரெய்லர் என அனைத்தும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.

அனைவரும் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த அமரன் திரைப்படம் இன்று வெளியானது.  தமிழ்நாட்டை தவிர மற்ற மொழிகளில் அதிகாலை 4 மணிக்கே அமரன் படம் வெளியானது. இந்த நிலையில், அமரன் படம்  எப்படி  இருக்கு என்பது குறித்து சமூக வலைதளத்தில்  ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Also Read: போட்டியாளர்களிடையே ஏற்படும் பிரிவினை.. பிக்பாஸில் வெடிக்கும் பிரச்னை!

அமரன் படம் முழுவதும் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இடையிலான காதல் காட்சிகள் சிறப்பாக இருந்துள்ளதாகவும், ராணுவ காட்சிகளும் அற்புதமாக இருந்ததாகவும் ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் அவரது நடிப்பில் மேஜர் முகுந்தை அப்படியே உயிர்ப்பித்ததிருக்கிறார்.

ட்விட்டர் விமர்சனம் இதோ

மேலும், ராணுவத்தின் மீதான முகுந்தன் இருந்த மரியாதையை சிவகார்த்திகேயன் சிறப்பாக கையாண்டு இருக்கிறார். சுவாரஸ்யமான காட்சி அமைப்புகள் மற்றும் ஜி.வி பிரகாஷின் பின்னணி இசை வேற லெவலாக இருந்தாக மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

சிவகாத்திகேயன் நடிப்பு பல இடங்களில் கூஸ்பம்ப்ஸ் தருணங்களாக இருந்தாகவும், சாய் பல்லவி தெறிக்கவிட்டதாகவும் ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார். மேலும், கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு படம் என்றும் கூறியுள்ளார்.

Also Read: தீபாவளி ஸ்பெஷல் திரைப்படங்கள்.. டிவியில் ஒளிபரப்பாகவுள்ள டாப் ஹீரோஸ் படங்கள்!

படத்தின் முதல் அட்டகாசமாக இருந்ததாகவும், பின்னணி இசை மற்றும் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி காதல் கட்சிகளை அருமையாக இருந்தாகவும் ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார். மேலும், சிவகார்த்திகேயன் நடிப்பு தனித்துவமாக சாய் பல்லவியின் சென்ட்டிமென்ட் காட்சிகள் நன்றாக இருந்தாகவும் குறிப்பிட்டிருந்தார்.

Latest News