சிவகார்திகேயனின் ‘அமரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
நடிப்பு மட்டும் இன்றி பாடல்கள் எழுவது, படங்களை தயாரிப்பது போன்ற பணிகளிலும் நடிகர் சிவகார்த்திகேயன் ஈடுபட்டு வருகிறார். இவர் நடித்து தயாரித்த ‘கனா’ படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து காமெடி கதைகளைக் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார்.
நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘அமரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 21-வது படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் கூட்டணி வைத்தார். இந்தப் படத்திற்கு ‘அமரன்’ என்று பெயர் வைத்தனர். சோனி பிக்சர்ஸுடன் இணைந்து இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. தமிழில் மீண்டும் ஒரு தேசபக்தி படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
வெள்ளித்திரைக்கு வருவதற்கு முன்னரே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சின்னத்திரையிலேயே பிடித்தவர் தான் சிவகார்த்திகேயன். சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன் சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றினார். இவர் தொகுத்து வழங்கிய அத்தனை நிகழ்சிகளுமே டிஆர்பியில் நல்ல இடத்தைப் பிடித்தது. சினிமாவில் நடிப்பதற்கு முன்பே இவர் தமிழ் ரசிகர்களிடையே பரிட்சையமான நபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு வெள்ளித்திரையில் நுழைந்த சிவகார்த்திகேயன் இப்போது கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக உள்ளார். நாயகனாக நடிக்கத் தொடங்கிய சிறிது காலத்திலேயே தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார் சிவகார்த்திகேயன்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான மாவீரன் மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அயலான் படம் வெளியீட்டில் தாமதம் ஆனாலும் குழந்தைகளை கவரும் வகையில் இருந்ததால் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
முன்னதாக ஒரு விருது வழங்கும் விழாவில் சிவகார்த்திகேயனைப் பார்த்து நடிகர் விஜய் ‘புடுச்சிட்டாரு… குட்டீஸ் எல்லாரையும் புடுச்சிட்டாரு’ என்ற கூறியது போல ஒருதரப்பட்ட ரசிகர்கள் மட்டும் இன்றி நடிகர் விஜய்க்கு இருப்பது போல குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களும் சிவகார்த்திகேயனுக்கு உண்டு.
நடிப்பு மட்டும் இன்றி பாடல்கள் எழுவது, படங்களை தயாரிப்பது போன்ற பணிகளிலும் நடிகர் சிவகார்த்திகேயன் ஈடுபட்டு வருகிறார். இவர் நடித்து தயாரித்த ‘கனா’ படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து காமெடி கதைகளைக் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார்.
மேஜர் முகுந்த் தனது 31-வது வயதில் நாட்டை எதிரிகளிடம் இருந்து காப்பதற்காக தனது இன்னுயிர் தந்து நாட்டின் மிக உயர்ந்த விருதான அசோக் சக்ரா விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் அந்த விருதை மறைந்த முகுந்த்தின் மனைவி இந்து முகுந்த் பெற்றுக்கொண்டார். இப்படம் தீபாவளி பண்டியை முன்னிட்டு வரும் அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ராஜ்கமல் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
Also read… முழுமதி அவளது முகமாகும்… ஹேப்பி பர்த்டே ஐஸ்வர்யா ராய்!
முன்னதாக இந்தப் படம் ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறு என்பதால் இது போர் சம்மந்தகாம இருக்கும் என்று கேள்விகள் எழுந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசியிருந்தார். அவர் கூறியதாவது இது மறைந்த ராணுவ வீரரான முகுந்தின் வாழ்க்கை வரலாறு. அவரின் குடும்பம் அவர் ராணுவத்தில் என்ன பணி செய்தார் என்பது குறித்து இந்தப் படம் இருக்கும் என்று படம் போர் சம்மந்தப்பட்டது இல்லை என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் படம் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் இந்தப் படம் ரூ. 21 கோடிகள் வசூலித்துள்ளதாகவும் தமிழ்நாட்டில் மட்டும் 15 கோடிகள் வசூலித்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.