‘லிங்கா’ பட நாயகிக்கு டும் டும் டும்… வைரலாகும் போட்டோஸ்! - Tamil News | Sonakshi Sinha-Zaheer Iqbal wedding photos viral on social media | TV9 Tamil

‘லிங்கா’ பட நாயகிக்கு டும் டும் டும்… வைரலாகும் போட்டோஸ்!

Published: 

25 Jun 2024 10:24 AM

Sonakshi Sinha - Zaheer Iqbal wedding: நடிகர்கள் சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜாகீர் இக்பால் இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான டபுள் எக்ஸ்எல் என்ற திரைப்படத்தில் சேர்ந்து நடித்தனர். அந்த படத்தில் நடிக்கும் போது காதலித்தாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன் 2020ம் ஆண்டில் இருந்தே இருவரும் டேட்டிங் செய்யத் தொடங்கியதாகவும் ஒருபுறம் கூறப்படுகிறது. படவிழாக்கள், பொது நிகழ்வுகளில் இருவரும் பல இடங்களில் ஒன்றாக காணப்பட்ட போது அவர்களை குறித்து கிசுகிசுகளும் பரவத் தொடங்கியது.

லிங்கா’ பட நாயகிக்கு டும் டும் டும்... வைரலாகும் போட்டோஸ்!

சோனாக்ஷி சின்ஹா - ஜாகீர் இக்பால்

Follow Us On

பாலிவுட் நடிகர்கள் சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் ஜாகிர் இக்பால் கடந்த 23-ம் தேதி ஞாயிற்று கிழமை திருமணம் செய்துக் கொண்டனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பாலிவுட்டில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருப்பவர் சோனாக்‌ஷி சின்ஹா. நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான இவர் தமிழில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக ‘லிங்கா’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர். இந்த நிலையில் தனது 7 வருட காதலரை தற்போது கரம் பிடித்துள்ளார் சோனாக்‌ஷி சின்ஹா. நடிகை சோனாக்ஷி சின்ஹா சுமார் 7 ஆண்டுகளாக பாலிவுட் நடிகர் ஜாகிர் இக்பாலை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவருடன் திருமணம் செய்து கொண்டார்.

நடிகர்கள் சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜாகீர் இக்பால் இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான டபுள் எக்ஸ்எல் என்ற திரைப்படத்தில் சேர்ந்து நடித்தனர். அந்த படத்தில் நடிக்கும் போது காதலித்தாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன் 2020ம் ஆண்டில் இருந்தே இருவரும் டேட்டிங் செய்யத் தொடங்கியதாகவும் ஒருபுறம் கூறப்படுகிறது. படவிழாக்கள், பொது நிகழ்வுகளில் இருவரும் பல இடங்களில் ஒன்றாக காணப்பட்ட போது அவர்களை குறித்து கிசுகிசுகளும் பரவத் தொடங்கியது.

Also read… Kanguva Movie : ‘திராணி, தைரியம் இல்லனா ஏன் படம் எடுக்குறீங்க.?’ சூர்யா ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், அனுஷ்கா, சந்தானம், ராதா ரவி உள்ளிட்ட பலர் நடித்த லிங்கா திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியானது. அந்தப் படத்தில் அப்பா ரஜினிக்கு நாயகியாக நடித்திருந்தார் சோனாக்‌ஷி சின்ஹா. பாலிவுட் நடிகை கிராமத்து பெண்ணாக கலக்கியிருப்பார். படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் சோனாக்‌ஷி ஷின்ஹாவின் கதாப்பாத்திரம் மக்களிடையே பேசப்பட்டது. இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் சோனாக்‌ஷி சின்ஹா இந்த ஆண்டு ஹீரமண்டி வெப்சீரிஸ் மற்றும் படே மியான் சோட்டே மியான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று சோனாக்ஷி – ஜாகீர் திருமணம், மிகவும் எளிமையாக சத்ருகன் சின்ஹாவின் வீட்டில் பதிவு திருமணமாக நடந்தது. இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version