Kottukkaali Movie : சூரியின் ’கொட்டுக்காளி’ படம் ரிலீஸ் தேதி.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட் - Tamil News | Sooris Kottukkaali to release on August 23 | TV9 Tamil

Kottukkaali Movie : சூரியின் ’கொட்டுக்காளி’ படம் ரிலீஸ் தேதி.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

Updated On: 

24 Jul 2024 12:21 PM

Actor Soori : தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகராகவும் நாயகனாகவும் கலக்கி வருகிறார் சூரி. அந்த வகையில் இவரது நடிப்பில் உருவான விடுதலை 2, ஏழு கடல் ஏழு மலை, கொட்டுக்காளி ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. இந்த மூன்று படங்களுமே சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனம் ஈர்த்தன. உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை சூரி ஈர்த்துள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த நிலையில் சூரியின் நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி படம் வருகின்ற ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகும் என சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kottukkaali Movie : சூரியின் ’கொட்டுக்காளி’ படம் ரிலீஸ் தேதி.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

’கொட்டுக்காளி’ படம்

Follow Us On

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘கொட்டுக்காளி’. இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். சூரி நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில், மலையாள நடிகை அன்னாபென் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார். குறிப்பாக கொட்டுக்காளி படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில் கூழாங்கல் படத்தை இயக்கி பெரும் கவனத்தையும், பாராட்டையும் பெற்ற வினோத்ராஜ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான சூரி, தொடர்ந்து பல படங்களில் மறக்க முடியாத நகைச்சுவை காட்சிகளை கொடுத்துள்ளார். வெண்ணிலா கபடி குழு படத்தில் இவர் இடம் பெற்ற பரோட்டா சாப்பிடும் காட்சி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அவர் ரஜினி, சூர்யா, அஜித், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் கூட்டணி வைத்து காமெடியில் கலக்கினார். சூரி – சிவகார்த்திகேயன் காம்போ உள்ள படங்கள் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து படத்திற்கு போகும் வகையில் இருந்தது. படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் சூரியின் காமெடி காட்சிகள் நிச்சயமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும்.

Also read… இந்த குழந்தை யார் தெரியுதா? விஜய், அஜித்துடன் நடித்த பிரபல நடிகைதான் இவங்க..

காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருந்த நடிகர் சூரி, இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை படத்திற்கு பின் கதாநாயகனாக மாறியிருக்கிறார். இப்படம் அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்ததால் அடுத்தடுத்து நல்ல ஹீரோயிசம் உள்ள கதைகளில் தற்போது நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. ‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி கதையின் நாயகனாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த மே மாதம் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கருடன் திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தமிழக பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகராகவும் நாயகனாகவும் கலக்கி வருகிறார் சூரி. அந்த வகையில் இவரது நடிப்பில் உருவான விடுதலை 2, ஏழு கடல் ஏழு மலை, கொட்டுக்காளி ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. இந்த மூன்று படங்களுமே சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனம் ஈர்த்தன. உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை சூரி ஈர்த்துள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த நிலையில் சூரியின் நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி படம் வருகின்ற ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகும் என சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன அழுத்தம் குறைய வேண்டுமா? அப்போ இது ஒன்னே போதும்.
நடிகை ஹன்சிகா மோத்வானியின் ரீசென்ட் ஆல்பம்
அழகியே... மிருணாள் தாகூரின் அசத்தல் ஆல்பம்
இணையத்தை கலக்கும் டாப்ஸி பன்னுவின் லேட்டஸ்ட் ஆல்பம்
Exit mobile version