5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சன் டிவியில் ஹிட் அடித்த எதிர்நீச்சல் சீரியலில் 2-ம் பாகம் எப்போது தொடங்குகிறது?

Ethirneechal 2: இந்த சீரியலின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் சில நாட்களுக்கு முன்பாக வெளியானது. அதில் முதல் பாகத்தில் நாயகியாக நடித்த மதுமிதா இந்த இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை. அவருக்கு பதில் விஜே பார்வதி நடிக்க உள்ளார். மற்ற மூன்று மருகள்களான கனிகா, பிரியதர்ஷினி, ஹரிபிரியா ஆகியோர் இந்த பாகத்தில் நடிக்கின்றனர்.

சன் டிவியில் ஹிட் அடித்த எதிர்நீச்சல் சீரியலில் 2-ம் பாகம் எப்போது தொடங்குகிறது?
எதிர்நீச்சல் 2
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Dec 2024 12:41 PM

சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் எப்போது ஒளிபரப்பாக உள்ளது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது. இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல் எதிர்நீச்சல். ஆண் ஆதிக்கதால் கஷ்டப்படும் பெண்கள் அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதே இந்த சீரியலின் ஒன்லைன். தொலைக்காட்சி சீரியல்கள் பார்க்கும் பல பெண்களுக்கு தங்கள் சொந்த வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை டிவியில் பார்ப்பதாக உணரும் அளவிற்கு மிகவும் எதார்த்தமாக இந்த சீரியல் எடுக்கப்பட்டிருந்தது. இந்த சீரியலில் வரும் நடிகர்களும் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றனர். தொடர்ந்து டிஆர்பியில் இடம் பிடித்து வந்த இந்த சீரியல் இந்த ஆண்டின் பாதியில் முடிவுக்கு வந்தது.

இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாப்பாத்திரத்தில் முதல் நடிகர் மாரிமுத்து நடித்திருந்தார். ஆணாதிக்கம்னா எப்படி இருக்கும் என்பதை தரூபமாக தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருப்பார். சீரியலில் இவரது மேனரிசமும், டைலாக் டெலிவரியும் ரசிகர்களிடையே பேராதரவைப் பெற்றது.

சீரியலில் இவர் பேசும் எம்மா ஏய் என்ற டைலாக் முதல் பல வசனங்களை ரசிகர்கள் ரீல்ஸ் மூலமாகவும் மீம்ஸ் மூலமாகவும் கொண்டாடித் தீர்த்தனர். படங்களிலும் மாரிமுத்து நிறைய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தாலும் இந்த சீரியலுக்கு பிறகு பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆனார். இந்த நிலையில் அவர் ஹார்ட் அட்டாக் காரணமாக உயிரிழந்தார்.

இதனால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்தனர். அதனை தொடர்ந்து யார் அந்த கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார்கள் யார் நடிப்பார் என்ற கேள்விகள் சமூக வலைதளத்தில் பேசுபொருளானது. அதனை தொடர்ந்து மாரிமுத்துவின் ஆதி குணசேகரன் கதாப்பாத்திரத்திற்கு நடிகர் வேலா ராமமூர்த்தி தேர்வானார்.

Also read… Cinema Year Ender: 2024-ல் கேரள பாக்ஸ் ஆபீஸை தெரிக்கவிட்ட டாப் 5 தமிழ் படங்கள்!

முதலில் அவரை அந்த கதாப்பாத்திரத்தில் ஏற்காத ரசிகர்கள் கதையின் ஓட்டத்தில் பின்னாட்களில் ஏற்றுக்கொண்டனர். ஒரு வீட்டிற்கு வரும் மருமகள்கள் எந்த அளவிற்கு கொடுமைகள் அனுபவிக்க முடியும் என்பதை எதார்த்தமாக காட்டியிருப்பார் இயக்குநர் திருசெல்வம். இவர் இந்த சீரியலை இயக்குவது மட்டும் இன்றி ஜீவானந்தம் என்ற கேரக்டரில் நடிக்கவும் செய்திருந்தார்.

Also read… Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் டாஸ்கில் ஏற்பட்ட விபரீதம்… மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட ராணவ்

இந்த நிலையில் இந்த சீரியலின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் சில நாட்களுக்கு முன்பாக வெளியானது. அதில் முதல் பாகத்தில் நாயகியாக நடித்த மதுமிதா இந்த இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை. அவருக்கு பதில் விஜே பார்வதி நடிக்க உள்ளார். மற்ற மூன்று மருகள்களான கனிகா, பிரியதர்ஷினி, ஹரிபிரியா ஆகியோர் இந்த பாகத்தில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் சீரியல் வரும் திங்கள் முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு புரோமோவை வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.

Latest News