சன் டிவியில் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்… ரசிகர்கள் அதிர்ச்சி!

Priyamaana Thozhi serial: சன் டிவியில் பிரியமான தோழி மே 2022 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சாண்ட்ரா பாபு, விக்கி ரோஷன் மற்றும் தீப்தி ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் கௌசிக் கேப்ரியல், அஞ்சலி பாஸ்கர், பிந்து பங்கஜ், தீபா, கணேஷ், பரத் குரு, கீதா சரஸ்வதி, காத்தாடி ராமமூர்த்தி, சுமதி ஸ்ரீ ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

சன் டிவியில் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்... ரசிகர்கள் அதிர்ச்சி!

பிரியமான தோழி

Published: 

28 Apr 2024 10:50 AM

பல தொலைக்காட்சிகள் பல விதமான தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. ஆனால் எப்போதும் போட்டி என்னவோ சன் டிவிக்கும், விஜய் டிவிக்கும் தான், இந்த இரண்டு சேனல்களின் தொடர்களுக்கு மவுசு அதிகம் என்றே கூறலாம்.

தமிழகத்தின் முன்னணி சேனல்கள் அனைத்திலுமே தவறாமல் ஒளிபரப்பாகி வருகின்றன சீரியல்கள். பிரபல சேனல்களில் மதிய நேரங்களில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் சீரியல்கள் இல்லத்தரசிகளையும், மாலை பிரைம் டைமிங்கில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் சீரியல்கள் இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் கவர்ந்து TRP ரேட்டிங் லிஸிட்டில் இடம்பிடித்து வருகின்றன.

சினிமா படங்களுக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருப்பதைப் போன்று டிவிகளில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதோடு சீரியல்களில் நடிக்கும் நடிகர்களை தங்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள் போல அன்பு செலுத்தி வருகிறார்கள் பார்வையாளர்கள்.

அந்த வகையில் சன் டிவியில் பிரியமான தோழி மே 2022 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சாண்ட்ரா பாபு, விக்கி ரோஷன் மற்றும் தீப்தி ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் கௌசிக் கேப்ரியல், அஞ்சலி பாஸ்கர், பிந்து பங்கஜ், தீபா, கணேஷ், பரத் குரு, கீதா சரஸ்வதி, காத்தாடி ராமமூர்த்தி, சுமதி ஸ்ரீ ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தத் தொடரை பி.செல்வம் எழுதி இயக்குகிறார்.

Also read… வசூலில் கெத்து காட்டும் பகத் பாசிலின் ஆவேசம்… ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?

பவித்ராவும் ஆதித்யாவும் நெருங்கிய நண்பர்கள், இவர்களைச் சுற்றியே கதை நகர்கிறது. பவித்ரா ஆதித்யாவின் மூத்த சகோதரனான அரவிந்தை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ஆதித்யா தனது பால்ய சிநேகிதியான சங்கவியை நிச்சயதார்த்தம் செய்துக் கொள்கிறார். இதற்கிடையே பவித்ரா மற்றும் அரவிந்தின் திருமணத்திற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, அரவிந்த் கட்டிடத்தில் இருந்து விழுந்து இறந்துவிடுகிறார். அடுத்ததாக பவித்ரா – ஆதி வாழ்க்கையில் என்னென்ன மாற்றம் நிகழ்கிறது என்பதை சுவாரஸ்யத்துடன் சொல்கிறது பிரியமான தோழி சீரியல்.

இந்நிலையில் சன் டிவியில் கிட்டத்தட்ட 600 எபிசோடுகள் நெருங்கி வரும் பிரியமான தோழி சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறதாம். இந்த தகவல் அந்த தொடரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்