5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Super Star Rajinikanth: தன்னுடைய பேரனுக்காக சூப்பர் ஸ்டார் செய்த செயல்.. இணையத்தில் வைரலான புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று அடம்பிடித்த தன்னுடைய பேரனை தானே பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள பள்ளி மாணவர்களை சந்தித்த புகைப்படத்தை ரஜினியின் மகள் சௌந்தர்யா சமூக வலைதளத்தில் பகிர்ந்து தன்னுடைய தந்தையை புகழ்ந்துள்ளார்.

Super Star Rajinikanth: தன்னுடைய பேரனுக்காக சூப்பர் ஸ்டார் செய்த செயல்.. இணையத்தில் வைரலான புகைப்படம்..!
ரஜினிகாந்த்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 26 Jul 2024 23:09 PM

தமிழ் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக தன்னுடைய 72 வயது இளமையுடன் நடைபெறும் ரஜினிகாந்த் தற்போதும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வருகிறார். தற்போது வேட்டையின் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து ஜெய் பீம் இயக்குனரான ஞானவேல் இயக்கத்தில் புதிய படத்தில் ஒப்பந்தமாக இருக்கிறார். அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்திலும் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Also Read: யோகி பாபுவின் ‘BOAT’ படத்தின் ட்ரெய்லர் இதோ!

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கும் புகைப்படங்களை ரஜினியின் மகள்களான ஐஸ்வர்யா, சௌந்தர்யா இருவரும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவர். எங்களது ரஜினியின் இரண்டாவது வாக்களான இயக்குனர் சௌந்தர்யா சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது தன்னுடைய மகன் பள்ளிக்கு செல்ல மறுத்து அடம்பிடித்து வீட்டிலேயே இருந்ததாகவும், அவனுடன் நான் போராடிய நிலையில், தன்னுடைய முடிவில் மாறாத தன் மகன் பள்ளிக்கு செல்ல மறுத்துவிட்டான். நான் அவனுடைய சூப்பர் ஹூரோ தாத்தாவான எனது அப்பாவை கூப்பிட்டு விவரத்தைச் சொன்ன உடனே அவர் எனது மகனிடம் அன்பாக பேசி அவனை அவரே பள்ளியில் கொண்டு சென்று விட்டுவிட்டு வந்தார்.

Also Read: விருமாண்டி நாயகி அபிராமிக்கு பர்த்டே!

அப்பா நீங்கள் திரையிலும் நிஜ வாழ்க்கையிலும் உங்களிடம் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை சிறப்பாகவே செய்து விடுகின்றீர்கள் அப்பா” என பதிவிட்டுள்ளார். ஒரு புகைப்படத்தில் தனது பேரனுடன் காரில் அமர்ந்திருக்கும் ரஜினிகாந்த் புகைப்படமும் மற்றொரு புகைப்படத்தில் பள்ளிகளுக்கு சென்ற அவர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடி நலம் விசாரிப்பது போன்றுள்ளது . அங்கு ரஜினியை பார்த்த மற்ற மாணவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சௌந்தர்யா பகிர்ந்த நிலையும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் டிராகன் வருகிறது. இந்த புகைப்படத்தை பலரும் பகிர்ந்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Latest News