5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சூர்யா 44… மாஸ் வீடியோவுடன் அப்டேட் கொடுத்த படக்குழு!

Suriya 44: சூர்யா தனது 44-வது படத்திற்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.

சூர்யா 44… மாஸ் வீடியோவுடன் அப்டேட் கொடுத்த படக்குழு!
சூர்யா 44
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Jun 2024 11:12 AM

சூர்யா 44 படக்குழு இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பரம் என வீடியோ ஒன்றின் மூலம் நேற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம், இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யா தனது 44-வது படத்திற்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.

படத்தில் பிரபல மலையாள நடிகர் இணையவுள்ளதாக கூறப்பட்டது. இவர் முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் -தனுஷ் கூட்டணியில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் நடித்தவர். இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜுடன் இரண்டாவது முறையாக அவர் சூர்யா 44 படத்தில் இணைய உள்ளார். இந்நிலையில் சூர்யா உடன் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடிப்பது உறுதியானது.

Also read… விரைவில் முடிவுக்கு வரும் எதிர்நீச்சல் சீரியல்? வருத்தத்தில் ரசிகர்கள்!

இசையமைப்பளர் சந்தோஷ் நாராயணின் பிறந்த நாளை முன்னிட்டு சூர்யா 44 படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சந்தோஷ் நாராயணனை இந்த படத்திற்கு வரவேற்பதாக படக்குழு ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இதுவரை சந்தோஷ் நாராயணன், சூர்யா படத்திற்கு இசையமைத்தது கிடையாது என்பதும் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடதக்கது.

நடிகர் சூர்யா இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில், படத்தில் நடிக்க இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டது. முன்னதாக ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் சூர்யா 44 படக்குழு படப்பிடிப்பு ஆரம்பரம் என வீடியோ ஒன்றின் மூலம் நேற்று அறிவித்துள்ளது.

Latest News