5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஹிட் பாடல்களை சொந்த குரலில் பாடிய நடிகைகள்.. யாரெல்லாம் இருக்காங்க?

நடிப்பு  மற்றும் குரல் இரண்டிலும் ரசிகர்களைத் தனது திறமைக் கொண்டு கைப்பற்றி  தமிழ்த்திரையுலகில் நீங்காத இடத்தை பிடித்துள்ளனர். இந்த நடிகைகள் தமிழ் சினிமாவில் ஹிட்டான பல பாடல்களைக் கொடுத்து ரசிகர் பட்டாளத்தை அள்ளிய நடிகைகள் யார் யார் என்பதைப் பற்றி பார்க்கலாம்

ஹிட் பாடல்களை சொந்த குரலில் பாடிய நடிகைகள்.. யாரெல்லாம் இருக்காங்க?
கோப்பு படம்
Follow Us
barath-murugantv9-com
Barath Murugan | Published: 19 Sep 2024 14:09 PM

தமிழ்த்திரையுலகில் பல நடிகைகள் தங்கள் சொந்த  குரல் மூலம் நிறைய ஹிட்டான பல பாடல்களைக் கொடுத்து தங்களின்  திறமையைக்  காட்டியுள்ளனர். இந்த நட்சத்திர நாயகிகள் தங்கள் நடிப்பு  மற்றும் குரல் இரண்டிலும் ரசிகர்களைத் தனது திறமைக் கொண்டு கைப்பற்றி  தமிழ்த்திரையுலகில் நீங்காத இடத்தை பிடித்துள்ளனர். இந்த நடிகைகள் தமிழ் சினிமாவில் ஹிட்டான பல பாடல்களைக் கொடுத்து ரசிகர் பட்டாளத்தை அள்ளிய நடிகைகள் யார் யார் என்பதைப் பற்றி பார்க்கலாம்  வாங்க..!

ஆண்ட்ரியா:

தமிழ்ப்படங்களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நடிகை தான் ஆண்ட்ரியா ஜெரெமையா. இவர் முதலில் தமிழில் பின்னணி பாடகியாகவும் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். இவர் ஆடுகளம் மற்றும் நண்பன் பட நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்துள்ளார். இவர் தமிழில் நடிகர் விக்ரம் நடித்த அந்நியன் திரைப்படத்தில் உள்ள “கண்ணும் கண்ணும் நோக்கியா” என்ற பாடலைப்பாடி அசத்தியுள்ளார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார். அதன்பிறகு கௌதம்மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில்  “கற்கக் கற்க” என்ற பாடலைப்பாடியுள்ளர். பிறகு,அவருடைய அடுத்த படமான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருடன் நடிக்கும் நடிகை ஆண்ட்ரியாவுக்கு  வாய்ப்புக் கிடைத்தது.

அதன் பிறகு ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் மற்றும் வடசென்னை போன்ற திரைப்படங்களில் முன்னணி நடிகர்களிடம் நடித்தார் ஆண்ட்ரியா. இவர் பாடிய பாடலை இவரின் ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் கூட சலிக்காமல் இன்னும் வைப் செய்து வருகின்றனர்.

நித்யா மேனன்:

தமிழ்ப்படங்களில் பல ரசிகர்களின் கனவுத்தோழியாக இருப்பவர்தான் நடிகை நித்யா மேனன். தமிழ்த்திரையில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் நடிப்பில் மட்டும் இல்லாமல் பின்னணி பாடகியாகவும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.  இவர் தெலுங்கு திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளர் அதில் “எடோ அனுகுந்தே”, “அம்மம்மோ அம்மோ” மற்றும்  நடிகர் சூர்யா மற்றும் நித்யா மேனன் நடித்த 24 படத்தின் தெலுங்கு மொழியில்  “லாலிஜோ” என்ற பாடலையும் பாடியுள்ளார்.

இவர் தனது 15 வயதில், கன்னடத் திரைப்படமான 7 ஓ’ க்ளாக் (2006) இல் துணைப் பாத்திரத்தில் நடித்து பின் 2008 ஆம் ஆண்டு வெளியான கே.பி குமரன் இயக்கிய ஆகாஷ் கோபுரம் திரைப்படம் மலையாளத்தில் அவரது திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். தமிழில் நூற்றெண்பது,வெப்பம் மற்றும் உருமி போன்ற படங்களில்  நடித்துள்ளார். ஆரம்பக்காலத்தில் பத்திரிக்கையாளராகத் தான் ஆக  விரும்பியதாக ஒரு தொலைக்காட்சியில் பேட்டி அளித்திருந்தார்.

பிறகு பத்திரிக்கைத் துறையிலிருந்த விருப்பம் குறைந்ததினால் புனே திரைப்படக் கல்லூரியில் ”சினிமோட்டோகிராபர்” படிப்பை படித்துள்ளார் நடிகை நித்யா.

Also Read : மணிரத்னம் படத்தின் நடிகை இந்த சிறுமி… யார் தெரியுதா?

சுருதி ஹாசன்:

தமிழில் முன்னணி நடிகரான கமல்ஹாசனின் மற்றும் நடிகை சரிகாவின் மூத்த மகள்  நடிகை மற்றும் பாடகியான ஸ்ருதி ஹாசன். இவர் தனது 6 வயதில் 1992  “போற்றிப் பாடிடப் பெண்ணே” என்ற கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் முதல் தனது பாடல் திறமையை வெளிக்காட்டினார். 2009ல் ஆண்டு வெளிவந்த  “உன்னைப்போல் ஒருவன்” திரைப்படத்திற்கு சுருதிஹாசனே இசை அமைத்துள்ளார். அதன் பிறகு “ரோட்டோர பாட்டுச்சத்தம் கேட்குதா” மற்றும் வாரணம் ஆயிரம் படத்தில் “அடியே கொல்லுதே” போன்ற திரைப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார்.

அதன் பிறகு  2011ல் “ஏழாம் அறிவு திரைப்படத்தில் வெற்றி கதாநாயகியாகத் தனது முதல் காலடியைப் பதித்தார். அதன் பிறகு 3, புலி மற்றும் பூஜை போன்ற படங்களில் நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு  படங்களிலும் நடித்துள்ளார்.

மம்தா மோகன்தாஸ்:

தமிழ் மற்றும் மலையாள நடிகையும் பிரபல பின்னணி பாடகியுமானவர் மம்தா மோகன்தாஸ். இவர் மலையாளம் , தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிரபல பின்னணிப் பாடகியாக இருந்து வருகிறார் . 2006 இல் தெலுங்கில் சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான விருதையும், தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகள் மற்றும் 2010 இல் மலையாளத்தில் சிறந்த நடிகைக்கான இரண்டு விருதுகள் உட்பட  பல பாராட்டுகளையும் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்

மேலும் 2010 இல் இரண்டாவது சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதையும் வென்றார் நடிகை மம்தா மோகன்தாஸ். இவர் தெலுங்கில் பல பாடல்களைப்பாடியுள்ளர் அதில் 2006 ராக்கி திரைப்படத்தில்  “ராக்கி ராக்கி”  என்ற பாடல் மூலமாக இசைத்துறையில் அறிமுகமானார்.

பின் இயக்குநர் கரு பழனியப்பன் இயக்கத்தில், நடிகர் விஷால் உடன் சேர்ந்து நடித்த “சிவப்பதிகாரம்” என்னும் படத்தின் மூலமாகத் தமிழில் கதாநாயகியாக  அறிமுகமானார்.

ராஷி கன்னா:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையானவர் நடிகை ராசி கன்னா. இவர் தமிழ் சினிமாவில்  இயக்குநர்  சி.ஜெ.ஜெயக்குமாரால் இயக்கிய திரைப்படத்தில் அறிமுக கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம், இந்தி போன்ற திரைப்படகளிலும் நடித்துள்ளார். தமிழில் அடங்கமறு,அயோக்கியா, அரண்மனை3, மற்றும் அரண்மனை 4 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் படங்களில் மட்டும் இல்லாமல் பாடல்களையும் பாடியுள்ளார். இவர் ‘ஜோரு’ ​​மற்றும் ‘வில்லன்’, ‘பாலகிருஷ்ணுடு’வில் ‘தாரிரா’ மற்றும் ‘ஜவானில்’ ‘பாகரு’ ஆகிய படங்களில் தலைப்புப் பாடலுக்கு நடிகை குரல் கொடுத்துள்ளார் நடிகை ராசி கன்னா. இவரின் நடிப்பு மட்டும் இல்லாமல் தற்போது பாடல்கள் பாடுவதிலும் பிரபலமாகி வருகிறார்.

Latest News