5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இந்தியன் படத்திற்கு வந்த சிக்கல்… நடிகர் சங்கத்தில் புகார் அளித்த நடிகை – என்ன நடந்தது!

Actress Suganya: இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசன் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய சங்கரே இயக்கியுள்ளார். மேலும் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தியன் படத்திற்கு வந்த சிக்கல்… நடிகர் சங்கத்தில் புகார் அளித்த நடிகை – என்ன நடந்தது!
இந்தியன் 2
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Jul 2024 13:46 PM

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம் வரும் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் நடிகை சுகன்யாவின் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு கமல் ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன். இந்த படத்தில் கமல் ஹாசன் அப்பா தந்தை என இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இதில் அப்பா கமலுக்கு நடிகை சுகன்யாவும் மகன் கமலுக்கு மனிஷா கொய்ராலாவும் நாயகியாக நடித்துள்ளனர். மேலும் கவுண்டமணி செந்தில் நாசர் என பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படம்  1996 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசன் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய சங்கரே இயக்கியுள்ளார். மேலும் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

பல வருடங்களாக இந்தியன் 2 திரைப்படம் எடுக்க முயற்சிகள் நடைபெற்ற வந்த நிலையில், 28 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி இப்படம் உலக அளவில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தியன் 2  திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இத்திரைப்படத்தின்  3 பாகம் வெளியாவதாக  படக்குழு அறிவித்துள்ளது.

இந்தத் திரைப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளிவந்த “பாரா பாரா” என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அடுத்து “நீலோற்பம்” உட்பட அனைத்து பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Also read… களைகட்டும் வரலட்சுமி சரத்குமாரின் திருமண கொண்டாட்டம்… வைரலாகும் போட்டோஸ்!

இந்த நிலையில் இந்தியன் முதல் பாகத்தில் நடித்த சுகன்யா அளித்த போட்டி ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. அதில், இந்தியன் படத்தின் படப்பிடிப்பின்போதுநான் துணி இல்லாமல் இருக்கு காட்சியில் எனது கை மட்டுமே தெரியும் அப்படிதான் படமாக்குவோம் என்று கதை சொல்லும்போது சொன்னார்கள். அதை கேட்டு தான் ஒப்புக்கொண்டேன். அந்த காட்சி படமாக்கப்படும்போது கூட உங்கள் கை மட்டும் தான் தெரியும்கமல்ஹாசன் உங்களுக்கு பொட்டு வைப்பார் என்று கூறினார்கள். ஆனால் படமாக்கும்போது வித்தியாசமாக இருந்தது. இதனால் நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருந்தேன்.

இது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நான் உடனே நடிகர் சங்கத்தில் இது தொடர்பாக முறையிட்டேன். அப்போது நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த ராதாரவி எனக்கு உறுதுணையாக இருந்தார். அவர் உடனே இது தொடர்பாக விசாரணை நடத்தி, எடுக்கப்பட்ட காட்சி படத்தில் வராது என எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். அதனை நினைத்து நான் இப்போதும் ராதா ரவி சாருக்கு நன்றி கூறுவேன் என குறிப்பிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.