Vanitha Vijayakumar: மீண்டும் திருமணமா? ரகசியத்தை உடைத்த வனிதா விஜயகுமார்… இணையத்தில் பரவும் தகவல்! - Tamil News | Tamil Actress Vanitha Vijayakumar robert no 4th marriage its Mrs And Mr Movie Update only says vanitha | TV9 Tamil

Vanitha Vijayakumar: மீண்டும் திருமணமா? ரகசியத்தை உடைத்த வனிதா விஜயகுமார்… இணையத்தில் பரவும் தகவல்!

Updated On: 

05 Oct 2024 15:56 PM

தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். தமிழில் முன்னணி நடிகரான விஜயகுமாரின் மகள் இவர். இவருக்கு ஏற்கெனவே இரண்டுக்கு மேற்பட்டதிருமணம் நடந்து விவாகரத்து ஆன பின் தற்போது நான்காவதாகத் திருமணம் செய்யவுள்ளார் என தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் நடிகை வனிதா விஜயகுமார்.

Vanitha Vijayakumar: மீண்டும் திருமணமா? ரகசியத்தை உடைத்த வனிதா விஜயகுமார்... இணையத்தில் பரவும் தகவல்!

மிஸஸ் அண்ட் மிஸ்டர்

Follow Us On

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர்  வனிதா விஜயகுமார்.  இந்த திரைப்படத்தை அடுத்து சில திரைப்படங்களில் நடித்தார். பின் பட வாய்ப்புகள் குறைய நடிகர் ஆகாஷை திருமணம் செய்து சில வருடங்களை விவாகரத்து வாங்கியும் உள்ளார். அடுத்தடுத்து திருமணங்களைச் செய்த வனிதா தற்போது நான்காவதாகத திருமணம் செய்ய உள்ளார் என்ற தகவல்கள் சமீபத்தில் வெளியான நிலையில் அது திருமணம் இல்லை திரைப்படம் என்று விளக்கம் அளித்துள்ளார். அதாவது, “மிஸஸ் அண்ட் மிஸ்டர்” திரைப்படத்தின் க்லிம்ஸ் வீடியோவை இணையத்தில் பகிர்ந்து நடிகை வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.

இதையும் படிங்க :‘மெய்யழகன்’ படத்தில் டெலிட் செய்யப்பட்ட சீன்ஸ்!

வனிதா விஜயகுமார் :

நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளாவின் மகள் தான் நடிகை வனிதா விஜயகுமார். தமிழில் விஜய் தொலைக்காட்சியில் வெளியான பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் இதன் மூலம் பிரபலமானாலும்  முதலில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக்கினார்.

இதையடுத்து தனது தாய் மற்றும் தந்தையுடனான குடும்ப பிரச்சனை காரணமாகத் தான் அனைவராலும் இவர் அறியப்பட்டார். நடிகை வனிதா முதலில் நடிகர் ஆகாஷ் என்பவரைத் திருமணம் செய்து இவருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை இருந்தது. இதைத்தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் இடையேயான பிரச்சனை காரணமாக இவர்கள் விவாகரத்து செய்துகொண்டனர்.

இதையடுத்து ராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதில் இவருக்கு ஒரு மகள் பிறந்த நிலையில் இவரையும் பிரச்சனை காரணமாக விவாகரத்து செய்தார். இதனைத் தொடர்ந்து நடன இயக்குநர் ராபர்ட் என்பவருடன் பழக்கத்திலிருந்துள்ளார் இதுவும் பிடிக்காத காரணத்தால் அடுத்தகாக பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்து சில மாதங்களில் விவாகரத்து பெற்றுத் தொடர் திருமணத்தின் காரணமாகப் பட்டிதொட்டி எங்கும் மிகவும் பிரபலமானார் நடிகை வனிதா விஜயகுமார்.

இதையும் படிங்க :இந்த படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுதா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

இதன் பின்பாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களால் மேலும் அறியப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானதைத் தொடர்ந்து இவருக்குத் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பல்வேறு வாய்ப்புகள் தேடி வந்து குவிந்தது. இதையடுத்து “குக் வித் கோமாளி” போன்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு நெருக்கமானார். இதையடுத்து இயக்குநர் வசந்தபாலனின் இயக்கத்தில் வெளியான “அநீதி” என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் வனிதா.

பல சர்ச்சைகளுக்குப் பெயர்போன நடிகை வனிதா தற்போது நான்காவதாகத் திருமணம் செய்யவுள்ளார் என மக்கள் மத்தில் பேசும் விதமாகக் கடந்த அக்டோபர் 1ல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்டை வெளியிட்டிருந்தார். அதில் நடன இயக்குநர் ரப்பர் மற்றும் வனிதா விஜயகுமார் மோதிரம் மாற்றுவது போல் “Save The Date” அக்டோபர் 5 என குறிப்பிட்டிருந்த நிலையில், அவர் நான்காவதாக ராபர்ட்டைத் திருமணம் செய்ய உள்ளார் என்ற தகவல் இணையத்தில் பரவியது.

தற்போது அவர் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அது திருமணம் இல்லை திரைப்படம் என்று வனிதா விஜயகுமார் கூறியுள்ளார். அதாவது, “மிஸஸ் அண்ட் மிஸ்டர்” என்ற திரைப்படத்தின் கிலிம்ஸ் வீடியோவை இணையத்தில் பகிர்ந்து விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க :15 வயதில் சினிமா.. தொடர் வெற்றி.. நடிகை அசின் சினிமா பயணம்!

மிஸஸ் அண்ட் மிஸ்டர் :

 

 

இத்திரைப்படத்தில் வனிதா மற்றும் ராபர்ட் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை நடிகை வனிதா இயக்கி மற்றும் இவரின் மகளான ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பதாக இந்த போஸ்டில் குறிப்பிட்டுள்ளார். இந்த திரைப்படமானது தற்போது “போஸ்ட் ப்ரொடெக்ஷனில்” இருப்பதாகவும் இன்னும் கூடிய சீக்கிரத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என தனது இன்ஸ்டாகிராம் போஸ்டில் தெரிவித்துள்ளார் வனிதா விஜயகுமார்.

இதையும் படிங்க :அடுத்த திருமணத்திற்கு தயாரான வனிதா விஜயகுமார்? பிக்பாஸ் பிரபலம்தான் மாப்பிள்ளையா 

குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
Exit mobile version