Actor Ranjith: நான் இரக்கமில்லாதவனா? – பத்திரிக்கையாளர் சந்திப்பில் கடுப்பான ரஞ்சித்!
Tamil Cinema: ரஞ்சித் தற்போது பாக்கியலட்சுமி சீரியலிலும் நடித்து வரும் அவர், நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் சினிமாவுக்கு திரும்பியுள்ளார். கவுண்டம்பாளையம் என்ற படத்தை அவர் இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் அலிபா, இமான் அண்ணாச்சி, அனிஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் ஏற்கனவே ஒருமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு போதிய தியேட்டர் கிடைக்காத காரணத்தால் தள்ளிவைக்கப்பட்டது.
நடிகர் ரஞ்சித்: 1990களின் காலக்கட்டத்தில் ஹீரோ, வில்லன் என முக்கிய கேரக்டரில் நடித்து கலக்கியவர் ரஞ்சித். தற்போது பாக்கியலட்சுமி சீரியலிலும் நடித்து வரும் அவர், நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் சினிமாவுக்கு திரும்பியுள்ளார். கவுண்டம்பாளையம் என்ற படத்தை அவர் இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் அலிபா, இமான் அண்ணாச்சி, அனிஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் ஏற்கனவே ஒருமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு போதிய தியேட்டர் கிடைக்காத காரணத்தால் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி கவுண்டம்பாளையம் படம் ஓரிரு தியேட்டர்களில் வெளியானது. நாடகக்காதல் மற்றும் ஆணவக்கொலையை மையப்படுத்தி இப்படத்தில் கதை அமைக்கப்பட்டுள்ளதுஇதனிடையே கவுண்டம்பாளையம் படம் ரிலீசான அன்று திரையரங்கில் சென்று ரஞ்சித் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார்.
Also Read: எமனாக மாறிய பார்பிக்யூ சிக்கன்.. பறிபோன இரண்டு உயிர்.. திடுக் காரணம்!
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ரஞ்சித்திடம், கவுண்டம்பாளையம் படத்தில் ஆணவ படுகொலைக்கு ஆதரவான காட்சிகள் இருப்பது பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, “உங்க பைக்கை ஒருவர் திருடி விட்டால் உடனே போய் அடிப்பீர்கள் தானே!. ஒரு கோபத்தில் நாம் அப்படி செய்வோம். அப்படியிருக்கையில் வாழ்க்கையே தன்னுடைய மகள் தான் என்கிற நிலை உள்ளது. அந்த குழந்தையில் எதிர்காலத்திற்கு ஏதாவது ஆகிற மாதிரியோ, அந்த குழந்தையின் வாழ்க்கை பாதிக்கிற மாதிரியோ இருக்கும்போது பெற்றோர்களுக்கு இருக்கக்கூடிய கோபம் அக்கறையின் காரணமாக வருவது தான். அது வன்முறை அல்ல. நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும் அது அக்கறையின் காரணமாக வருவது தான். அது குற்றமாக எனக்கு தெரியவில்லை என பேசியிருந்தார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி கடுமையான எதிர்ப்புகளை இணையவாசிகளிடம் பெற்றது.
Also Read:Cinema Rewind: எம்டன் படத்தில் இது எனக்கு பிடிக்கவே இல்லை… சரண்யா பொன்வண்ணன்
இதனைத் தொடர்ந்து நேற்று பத்திரிக்கையாளர்களை மீண்டும் சந்தித்த ரஞ்சித், “நான் ஆணவக்கொலைக்கு ஆதரவானர், ரஞ்சித் ஆதரவாக பேசுகிறார் என சொல்கிறார்கள். காதலில் பாதிக்கப்படும் ஆண், பெண் இருவருமே ஒரு தாயின் குழந்தை தானே. யார் பாதித்திருந்தாலும் அம்மாவுக்கு அழுகை வரத்தான் செய்யும். உலகத்தில் எந்த பிரச்னை ஆனாலும் வன்முறை தீர்வாகாது. அவ்வளவு இரக்கமில்லாத மனிதனா நான்?. என் மீதான கருத்தை இப்படியா வைப்பீர்கள்.
நான் சொன்ன கருத்தை திரித்து சமூக வலைத்தளங்களிலும், பார்க்கும் இடங்களிலும் களங்கம் ஏற்படும் வகையில் செய்துள்ளார்கள். இத்தனை ஆண்டுகாலமாக நான் பெற்றிருக்ககூடிய நன்மதிப்பை கெடுத்துள்ளார்கள். எனக்குன்னு ஒரு குடும்பம், சொந்த பந்தங்கள் எல்லாம் இருக்கு. யாராவது ஒரு மனிதன் ஆணவ கொலைக்கு ஆதரவு தெரிவிப்பானா?. எனக்கும் அதில் நிச்சயம் உடன்பாடு கிடையாது” என தெரிவித்தார். இப்படி ஆணவ கொலைக்கு எதிராக மாற்றி மாற்றி ரஞ்சித் பேசிய கருத்துகளை இணையவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.