5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Rajinikanth On Hema Committee Report: ஹேமா கமிட்டி அறிக்கை.. பதில் சொல்லாமல் நழுவிய ரஜினி.. நெட்டிசன்கள் விளாசல்

கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாள சினிமாவில் பெண் நடிகைகள் மற்றும் கலைஞர்கள் மீதான பாலியல் தொந்தரவு மற்றும் வன்கொடுமைகள் தொடர்பாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது. கேரள அரசால் அமைக்கப்பட்ட இந்த விசாரணை குழுவுக்கு ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமை வகித்தார். இந்த குழு கடந்த 2019 ஆம் ஆண்டு அரசிடம் சமர்பிக்கப்பட்ட நிலையில் வெளியிடப்படாமல் இருந்தது.

Rajinikanth On Hema Committee Report: ஹேமா கமிட்டி அறிக்கை.. பதில் சொல்லாமல் நழுவிய ரஜினி.. நெட்டிசன்கள் விளாசல்
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 25 Sep 2024 09:20 AM

ஹேமா கமிட்டி அறிக்கை: மலையாள சினிமா உலகில் மிகப்பெரிய புயலாக அமைந்த ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக தமிழ் பிரபலங்கள் பதிலளிக்க மறுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாள சினிமாவில் பெண் நடிகைகள் மற்றும் கலைஞர்கள் மீதான பாலியல் தொந்தரவு மற்றும் வன்கொடுமைகள் தொடர்பாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது. கேரள அரசால் அமைக்கப்பட்ட இந்த விசாரணை குழுவுக்கு ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமை வகித்தார். இந்த குழு கடந்த 2019 ஆம் ஆண்டு அரசிடம் சமர்பிக்கப்பட்ட நிலையில் வெளியிடப்படாமல் இருந்தது. இப்படியான நிலையில் பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பின் ஹேமா கமிட்டி அறிக்கையின் குறிப்பிட்ட பகுதி மட்டுமே வெளியாகியுள்ளது.

Also Read: TVK Vijay: விஜய் மாநாடு நடக்குமா? நடக்காதா? புஸ்ஸி ஆனந்திற்கு பறந்த கடிதம்.. என்ன மேட்டர்?

இதில் மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாகவும், நிர்வாணமாக நடிக்க கட்டாயப்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில பிரபலங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மலையாளத் திரையுலகை சார்ந்த பெண் கலைஞர்கள் பலரும் நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் மீதும் பாலியல் புகார்களை அடுக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரபலங்கள் கேரள  நடிகர் சங்கமான அம்மா அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தனர்.

நெருக்கடிகள் முற்றியதால் வேறு வழியின்றி சங்கத்தின் தலைவர் மோகன்லால் தொடங்கி 17 உறுப்பினர்களும் ராஜினாம செய்தனர். இதனிடையே பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கை சட்டப்படி சந்திக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: Crime: 4 வயது குழந்தையை கொன்ற தாய்.. உயிருடன் கிணற்றில் வீசிய கொடூரம்… பகீர் காரணம்!

பதிலளிக்க மறுத்த தமிழ் பிரபலங்கள்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்திடம் ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ”ஹேமா குழு அறிக்கை குறித்து எனக்கு தெரியாது” என பதிலளித்தார். அதேபோல் தேனியில் தனியார் ஜவுளிக்கடை திறப்பு விழாவில் நடிகர் ஜீவா கலந்து கொண்டார். அவரிடம் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “இதற்கு ஏற்கனவே பதில் சொல்லி விட்டேன். நல்ல நிகழ்வில் இதுபற்றி பேச வேண்டாம்” என சொல்லி அதிருப்தி தெரிவிக்கும் வகையில் பதில் சொன்னார்.

முன்னதாக நடிகர் விஷால், “தமிழ்நாட்டிலும் ஹேமா கமிட்டி போல தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் 10 பேர் கொண்ட குழு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறோம் என தெரிவித்திருந்தார்.இப்படியாக ஒவ்வொரு பிரபலமும் தெரியாது என்றும், ஹேமா கமிட்டி அறிக்கையில் சொல்லப்படுவதை அமல்படுத்த வேண்டும் என கூறி வருகின்றனர். ஆனால் முன்னணி பிரபலங்கள் அதனைப் பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள், எல்லாம் தெரிந்து தான் நடக்குதா என பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Latest News