லோகேஷ் கனகராஜின் LCU -ல் மொத்தம் எத்தனை படங்கள் தெரியுமா? - Tamil News | Tamil Director Lokesh Kanagaraj To Tell About LCU Movies Details | TV9 Tamil

லோகேஷ் கனகராஜின் LCU -ல் மொத்தம் எத்தனை படங்கள் தெரியுமா?

Lokesh kanagaraj Movies : தமிழ்த் திரைப்பட இயக்குநர்களில் தனது வித்தியாசமான கதை அமைப்பினால் மிகவும் பிரபலமானவராக இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புகளைப் பெற்ற நிலையில், இவர் இயக்கிவரும் திரைப்படங்களை LCU (Lokesh Cinematic Universe) என்ற பெயரில் தொடர் திரைப்படங்களாக இணைத்து வருகிறார். இந்நிலையில் அதற்கான அப்டேட் ஒன்றை லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜின் LCU -ல் மொத்தம் எத்தனை படங்கள் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ்

Updated On: 

07 Nov 2024 18:36 PM

விறுவிறுப்பாகத் தமிழ் சினிமாவில் மாறுபட்ட திரைக்கதைகளை இயக்கிவருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் திரைப்படத்தை இயக்கியதன் மூலமாகத் திரையுலகில் அறிமுகமான இவர். விஜய் , சூர்யா, கமல் மற்றும் கார்த்திக் எனப் பல தமிழ் பிரபலங்களை வைத்து புது புது பாணியில் தொடர்ச்சியாகத் திரைப்படங்களை இயக்கி வருகிறார். ஹாலிவுட் திரைப்படங்களைப் போல இவர் இயக்கம் ஒவ்வொரு திரைப்படங்களையும் இணைத்து அடுத்ததிரைப்படங்களை உருவாக்கி வரும் லோகேஷ் தற்போது தமிழ் இயக்குநர்களில் மிகவும் பிரபலமான இயக்குநராக இருந்துவருகிறார். இவர் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘கூலி’ திரைப்படத்தை இயக்கிவருகிறார்.

இத்திரைப்படத்தில் ரஜினியுடன் தெலுங்கு பிரபல நடிகரான நாகா அர்ஜுனா இணைத்து நடித்துவரும் நிலையில் இந்த திரைப்படம் மிகப் பிரம்மாண்ட வரவேற்புகளுடன் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் இயக்குநர் லோகேஷ் அவர் உருவாகிவரும் LCUவில் இன்னும் எத்தனை திரைப்படங்கள் இருக்கிறது என்று மாஸ் அப்டேட்டை கொடுத்துள்ளார்.

LCUவில் இன்னும் எத்தனை திரைப்படங்கள்

தமிழ்த் திரைப்படங்களில் ஆக்ஷன், ஸ்மக்ளிங் என சுவாரஸ்யமான கதைகளுடன் திரைப்படங்களை உருவாக்கி வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ஆரம்பக்கட்டத்தில் குறும்படங்களை இயக்குவதன் மூலமாகத் தனது திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்த இவர் 2017ல் வெளியான மாநகரம் திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். நடிகர்கள் ஸ்ரீ, சந்தீப் கிஷன் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோரின் நடிப்பில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையும் படிங்க :‘சரண்யா மீது காதல் வர இதுதான் காரணம்’.. பொன்வண்ணன் சொன்ன விஷயம்..

க்ரைம் மற்றும் ஆக்ஷன் கதைக்களத்துடன் வெளியான இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்க ஆரம்பித்தார்.தனது இரண்டாவது திரைப்படத்திலேயே பிரபல நடிகர் கார்த்திக்கின் நடிப்பில் உருவாக்கினார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த கைதி திரைப்படம் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்துடன் அமைந்த இப்படத்தில் நடிகர் கார்த்திக்குடன், நரேன் , அர்ஜுன் தாஸ் , ஹரிஷ் உத்தமன் , ஜார்ஜ் மரியன் மற்றும் தீனா எனப் பல தமிழ் பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் லோகேஷிற்கு பிரம்மாண்ட வெற்றி திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்துதான் தனது LCU படத் தொகுப்பில் முதல் திரைப்படமாக அறிவித்திருந்தார்.

கைதி திரைப்படம் இவருக்கு பெரும் வெற்றித் திரைப்படமாக அமையவே இவரது மூன்றாவது திரைப்படத்தைத் தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாக்கினார். 2021ல் வெளியான மாஸ்டர் திரைப்படம் விஜய் ரசிகர்களிடையேயும், மக்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து ஆக்ஷ்ன் மற்றும் திரில்லர் கதைகளை மையமாகக் கொண்டு திரைப்படங்களை உருவாக்கி வந்த லோகேஷ் இந்த திரைப்படத்தையும் அந்த பாணியில் உருவாக்கினார். விஜய்யுடன் மாளவிகா மோகன் , ஆண்ட்ரியா ஜெரேமியா , அர்ஜுன் தாஸ் , சாந்தனு பாக்யராஜ் எனப் பலரும் நடித்திருந்த நிலையில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியின் ஆசிரியராக மாஸ்டர் படத்தில் விஜய் நடித்திருந்தார்.

இதையும் படிங்க :சீரியல் ‘டிஆர்பி’ ரேட்டிங் இதுதான்.. டாப்பில் இருக்கும் தொடர் எது தெரியுமா?

இந்த திரைப்படத்தின் மூலம் விஜய் ரசிகர்களிடையேயும் வரவேற்புகளைப் பெற்ற லோகேஷ் தமிழ் உச்ச நட்சதிரைங்களை வைத்து அடுத்தடுத்த திரைப்படங்களை உருவாக்க ஆரம்பித்தார். தொடர்ந்து விஜய், கமல், ரஜினி எனத் தமிழ் பிரபலங்களை வைத்து தனது படங்களை இயக்க ஆரம்பித்தார். இதிலும் இவர் இயக்கிய விக்ரம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா கேமியோ ரோலில் நடித்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருப்பார்.

இந்த மாதிரியான வித்தியாசமான கதைகளுடன் திரைப்படங்களை இயங்கிவந்த லோகேஷ் தனது திரைப்படங்களை அவர் உருவாக்கிய “LCU” தொடரில் இணைக்க ஆரம்பித்தார். இந்நிலையில் இவர் உருவாக்கிய LCU கதை தொகுப்பில் கைதி, விக்ரம் மற்றும் லியோ போன்ற திரைப்படங்களை இணைத்தார். இந்நிலையில் தான் தயாரிக்கும் பென்ஸ் படத்தையும் தன்னுடைய LCUல் இணைத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது

இதையும் படிங்க :நடிகை ராஷி கண்ணா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

இந்நிலையில் தனது LCU குறித்து அடுத்த அப்டேட் ஒன்றை கூறியுள்ளார். அதில் அவர் அவர் இயக்கிய முதல் 3 திரைப்படங்கள் அடித்தளம் என்றும் 4-வது திரைப்படம் அஸ்திவாரம் என்றும் 5-வது அடுத்தது எனவும் 6-வது திரைப்படம் கடைசிக்கு முந்தைய திரைப்படம் என்றும் 7 அல்லது 8-வது திரைப்படம் LCU வின் இறுதியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். அந்த வரிசையில் கைதி 2 திரைப்படத்தை இயக்கப்போவதாகவும் மற்றும் ஸ்ருர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்காக தனி திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் நடிகர் விஜய் சம்மதித்தால் லியோ 2 வரும் என்றும் இல்லையெனில் விக்ரம் 2 இந்த LCU யூனிவர்ஸின் இறுதி திரைப்படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

கருப்பு நிற புடவையில் கலக்கும் கீர்த்தி சுரேஷ்
புடவையில் கலக்கும் ஜான்வியின் போட்டோஸ்
நடைபயிற்சிக்கு பிறகு இந்த தவறை பண்ணாதீங்க
ஓட்ஸ் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?