OTT Movies: இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் கோலிவுட் படங்களின் லிஸ்ட் இதோ! - Tamil News | Tamil movies are going to release in ott platforms this week | TV9 Tamil

OTT Movies: இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் கோலிவுட் படங்களின் லிஸ்ட் இதோ!

Watch to Watch: தியேட்டரில் வெளியாகும் புதுப் படங்கள் வெளியாகி 4 முதல் 6 வாரங்களிலேயே தற்போது ஓடிடி தளங்களில் வெளியாகிவிடுகிறது. இதனால் ரசிகர்கள் தாங்கள் தியேட்டரில் பார்க்கத் தவறிய படங்களை வீட்டில் இருந்தே பார்த்து மகிழ்கின்றனர்.

OTT Movies: இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் கோலிவுட் படங்களின் லிஸ்ட் இதோ!

படங்கள்

Published: 

21 Oct 2024 15:36 PM

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் பிரேம் குமார். இவர் அடுத்ததாக கார்த்தியின் 27-வது படத்தை இயக்கியுள்ளார். மெய்யழகன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்தசாமி இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இதில் ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா மற்றும் தேவதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படம் கடந்த மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படம் வருகின்ற 25-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது குறிப்பிடதக்கது.

இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பன்முக திறமையுடன் கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருப்பவர்களில் ஹிப் ஹாப் தமிழா ஆதியும் ஒருவர். இசையமைப்பாளராக ஆம்பள உள்ளிட்ட பல படங்களில் தோன்றி மிகப்பெரிய ஹிட் கொடுத்த இவர் தமிழ் சினிமாவில் மீசைய முறுக்கு என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், கதையின் நாயகனாகவும் அறிமுகமானார். அதற்கு முன்னதாகவே பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். அடுத்து 2021-ல் ‘சிவகுமாரின் சபதம்’ என்ற தனது இரண்டாவது படத்தை இயக்கினார். தற்போது அவர் மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ‘கடைசி உலகப் போர்’ என தலைப்பிடப்பட்டது. படம் கடந்த செப்டம்பர் மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில் தற்போது படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அந்த வகையில் படம் வருகின்ற 25-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது.

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படம் கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.  இயக்குநர் சீனு ராமசாமி முன்னதாக இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் ஆகிய படங்கள் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. மாமனிதன் திரைப்படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று பல விருதுகளை வென்றது. சீனு ராமசாமி இயக்கிய இந்தப் படத்தில் யோகி பாபு, புதுமுகங்கள் ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடித்துள்ளனர். அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். என்.ஆர்.ரகுநந்தன் இந்தப் படத்திற்கு இசை அமைதிருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்ற நிலையில் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல்க் வெளியாகியுள்ளது. அதன்படி படம் வருகின்ற 24-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது.

‘மர்ம தேசம்’ புகழ் இயக்குநர் நாகா இயக்கத்தில் சாய் தன்ஷிகா நடித்துள்ள தொடர் ‘ஐந்தாம் வேதம்’. அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள இந்தப் புராணத் தொடரில், சாய் தன்சிகா உடன் சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், மற்றும் ஒய்.ஜி. மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்த வெப்சீரிஸ் உருவாகியுள்ளது. இந்த தொடர் அக்டோபர் 25-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.

மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்..?
முள்ளங்கியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?
கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 தள்ளுபடி!
சாத்துக்குடியில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?