5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஓடிடியில் இருக்கும் சிறந்த டாப் 5 வெப் சீரிஸ் லிஸ்ட்!

Top 5 Tamil Web Series : திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ்களையும் மக்கள் அதிகம் பார்க்க தொடங்கி விட்டனர். ஓடிடி வரவுகளுக்கு பிறகு வெப்சீரிஸ் மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. மொழி வித்தியாசமின்றி அனைத்து மொழி வெப் சீரிஸ்களையும் மக்கள் பார்க்கின்றனர். அந்த வகையில் தமிழில் வெளியாகி வரவேற்பை பெற்ற சில வெப் சீரிஸ்கள் பற்றி பார்க்கலாம்

ஓடிடியில் இருக்கும் சிறந்த டாப் 5 வெப் சீரிஸ் லிஸ்ட்!
மாதிரி படம் (Photo Credit: Wikipedia)
Follow Us
barath-murugantv9-com
Barath Murugan | Published: 18 Sep 2024 10:45 AM
ஹார்ட் பீட்: முதல் இடத்தில் இருப்பது ஹார்ட் பீட். தமிழ் மொழியில் வெளியான மருத்துவ கதையை மையமாகக் கொண்ட தொடர்கதையாகும். இக்கதையை இயக்குநர்கள் தீபக் சுந்தர் ராஜன் மற்றும் அப்துல் கபீஸ் இணைந்து இயக்கியுள்ளனர். நட்பு, காதல், குடும்பம் மற்றும் மருத்துவம் போன்ற கதையைக் கொண்டுள்ளது. இத்தொடர்கதையில் மலையாள நடிகை அனுமோல் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்னும் பல நடிகர்களும் நடித்துள்ளனர். இத்தொடர் 8 மார்ச் 2024 அன்று ஹாட்ஸ்டாரில் வெளியானது. இது தற்போது இணையத்தில் 10க்கு 8.7 அளவில் ரேட்டிங் வாங்கியுள்ளது.

சட்னி சாம்பார்:

இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் நடிகர் யோகிபாபு, வாணி போஜன், நிதின் சத்யா, மைனா நந்தினி மற்றும் நிழல்கள் ரவி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த சீரிஸின்  கதை ஊட்டியில் இப்படி ஒரு சாம்பார் எங்கும் கிடைக்காது, ஊர் உலகமே இந்த சாம்பார்-காக தான் வரும் என்பது போலத்தான். அமுதா கஃபே என்ற ஹோட்டல் நடத்தி வருகிறார் நிழல்கள் ரவி. அன்பான மனைவி, அழகான குடும்பம் என அவர் இருக்க, அப்போது எதிர்பாராத விதமாக நிழல்கள் ரவிக்கு கேன்சர் 3வது கட்டத்தை அடைய அதன் பின்னர் நடக்கும் கதையே இந்த சீரிஸின் கதைக்களம்.

தலைமைச் செயலகம்:

 இத்தொடரை இயக்குநர் வசந்தபாலன் இயக்கியுள்ளார். இத்தொடரில் கிஷோர்,ஸ்ரேயா ரெட்டி,பரத்,ஆதித்யா மேனன்மற்றும் ரம்யா நம்பீசன் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். அரசியல் கதைக்களத்தைக் கொண்ட ஊழல் குற்றம்சாட்டப்பட்டுத் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் முதல்வர், அவரின் நாற்காலியைக் குறிவைத்து நடக்கும் அரசியல் சதுரங்கம், நடுவே சில கிளைக்கதைகளாக இந்த  ‘தலைமைச் செயலகம்’ வெப் சீரிஸ் உள்ளது. தற்போது இணையத்தில் 10க்கு 7.4 என மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

ஜர்னி:

சேரன் இயக்கத்தில் வெளியான வெப் சீரிஸ் “ஜர்னி”. இத்தொடரின் கதை பெரிய கார் கம்பெனியின் ஓனரான சரத்குமார் புதிதாக பேட்டரி கார் ஒன்றை அறிமுகப்படுத்தப் போகிறேன் என்றும் அதற்குத் திறமை மற்றும் நம்பிக்கை வாய்ந்த ஒரு நபரை பணியமர்த்தப் போகிறேன் என்றும் கூறுகிறார். அதன்பின்னர் என்ன நடக்கிறது என்பதே மிச்ச கதை. இதில் திவ்யா பாரதி, சரத் குமார், மற்றும் கலையரசன் போன்ற முன்னணி பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். இணையத்தில் 10க்கு 7.3 என்ற கணக்கில்  நான்காவது இடத்தில் உள்ளது. 1997ல்  பாரதி கண்ணம்மா படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமான சேரன், தொடர்ந்து பொற்காலம், வெற்றிக் கொடிகட்டு, பாண்டவர் பூமி எனப் பல நல்ல படங்களை இயக்கினார். அதன் பின்னர் “சொல்ல மறந்த கதை” போன்ற படங்களில் அவரே நடிக்கவும் ஆரம்பித்தார். அவர் தற்போது திரைப்படங்களை விட்டுவிட்டு வெப்சீரிஸில் இறங்கியுள்ளார்.

கனா காணும் காலங்கள்:

இந்த லிஸ்டில் 5 வதாக இருப்பது சின்னத்திரை இயக்குநர் சத்திய நாராயணன் இயக்கத்தில் வெளியான கனா காணும் காலங்கள் பகுதி 2 தொடராகும். இத்தொடரானது பரத் குமார், பிரவீணா , அரவிந்த் செய்ஜு, ராஜா வெற்றி பிரபு, தேஜா வெங்கடேஷ் மற்றும் தீபிகா வெங்கடாசலம் ஆகிய முக்கியமான கதாபாத்திரங்களை மையமாக வைத்து நகருகிறது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களைச் சுற்றி நடக்கும் போட்டிகள், சண்டைகள், குடும்ப விஷயங்கள், ஈகோ, பொறாமை, காதல், நட்பு உள்ளிட்ட  பள்ளி மாணவர்களின் தினசரி நிகழ்வுகளையே தொடரில் கதையாகக் கொண்டுவந்துள்ளனர். இத்தொடர் தற்போது இணையத்தில் 10க்கு 7.3 என ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

Latest News