5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Exclusive: சிறு பட்ஜெட் படங்கள்.. ரிவியூ பிரச்னை.. 2024 படங்கள் குறித்து திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி!

Tamil Cinema: ஜனவரியில் வெளியான கேப்டன் மில்லர், அயலான் தொடங்கி இந்தியன் 2, கங்குவா, வேட்டையன், தி கோட் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக கடுமையான விமர்சனத்தை சந்தித்தது.

Exclusive: சிறு பட்ஜெட் படங்கள்.. ரிவியூ பிரச்னை.. 2024 படங்கள் குறித்து திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 29 Nov 2024 18:19 PM

தமிழ் சினிமா: இந்தியாவில் சினிமா என்பது மக்களின் மிகப்பெரிய பொழுதுபோக்குகளில் ஒன்றாகும். தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகியவை முன்னணி திரைப்பட மொழியாக நாம் அறிந்திருந்தாலும் 36 வகையான மொழிகளில் இந்திய படங்கள் வெளியியாவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படியான நிலையில் தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் அதனை கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின் என இரு வகையில் பிரிக்கலாம். காரணம் 2020 ஆம் ஆண்டு கால கட்டத்திற்கு முன் இந்தியாவில் ஓடிடி தளங்களின் வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட அளவிலேயே உயர்ந்து கொண்டிருந்தது.

ஆனால் கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் அந்த 2 ஆண்டுகளில் ஓடிடி அடைந்த வளர்ச்சி என்பது கணிக்கவே முடியாத அளவுக்கு இருந்தது. மீண்டும் மக்களை  தியேட்டர்களுக்கு வரவழைக்கும் முயற்சியில் தியேட்டர் நிர்வாகம் முதல் பல குழுவினர் வரை அனைவரும் ஈடுபட்டனர்.

Also Read: பிரபல மலையாள நடிகர் சௌபின் ஷாகீர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை

2024ல் தமிழ் சினிமா

இதற்கிடையில் 2024 ஆம் ஆண்டு தமிழில் வெளியான படங்களை எடுத்துக் கொண்டால் பல முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்தும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியது. ஜனவரியில் வெளியான கேப்டன் மில்லர், அயலான் தொடங்கி இந்தியன் 2, கங்குவா, வேட்டையன், தி கோட் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. தியேட்டர்களுக்கு  சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே காத்திருந்த நிலையில் அவர்கள் படம் முடிந்ததும் வந்து படம் பற்றி கருத்து தெரிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

Also Read: Cinema: யூட்யூப் சேனல்களை உள்ளே விடாதீங்க..தியேட்டர்களுக்கு பறந்த உத்தரவு

ஆனால் அது நாளடைவில் விமர்சனம் என்ற பெயரில் நடைபெற்ற தனிமனித தாக்குதல்கள் படத்தின் வசூலை வெகுவாக பாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது இந்த ஆண்டின் கடைசியில் பூதாகரமாக வெடித்துள்ளது.2025ல் இதற்கு ஒரு முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் முன்னணி நடிகர்கள் படங்கள் சொதப்ப, எதிர்பாராத சிறு பட்ஜெட் படங்கள் பாராட்டையும், வசூலையும் பெற்றது. இந்த நிலையில் தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் 2024 தமிழ் சினிமா பற்றி TV9 தமிழுக்கு அளித்த பேட்டி பற்றி காணலாம்.

2024 ஆம் ஆண்டு சினிமா உலகம் எப்படி, தியேட்டர் நிலவரம் எப்படி இருக்கு?

2024 ஆண்டில் திரையுலகம் மற்றும் தியேட்டர் நிலவரம் நல்லபடியாகவே சென்றது. அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டில் முன்னணி நடிகர்களின் படங்கள் பெரிய அளவில் செல்லவில்லை. ஆனால் சின்ன பட்ஜெட் படங்கள் நன்றாகவே ஓடியது. இதன்மூலம் படம் நன்றாக இருந்தால் பெரிய நடிகர், சின்ன நடிகர் என்று இல்லாமல் யார் படங்கள் தரமாக இருந்தாலும் மக்கள் ரசிப்பார்கள் என்பது தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

விஜய், அஜித்துக்குப் பின் 2 ஆம் கட்ட நடிகர்கள் முன்னாடி வர்றாங்க. வசூலை இவங்க எட்டிப்பிடிக்க இன்னும் சில காலம் ஆகும். இதனால் தியேட்டர் வசூல் நிலவரம் பாதிக்கப்படுமா?

கண்டிப்பாக இல்லை என சொல்லலாம். காரணம் 100 ஆண்டுகால வரலாறு கொண்ட தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்கள் மட்டும் தான் நடித்து வருகிறார்களா? இல்லையே. தியாகராஜ பாகவதர் காலக்கட்டத்தில் இருந்தே ஒவ்வொரு காலத்துக்கும் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த் என முன்னணி நடிகர்கள் என்பது மாற்றம் கண்டுதான் வருகிறது. அதனால் தியேட்டரில் வசூல் நிலவரம் பாதிக்கப்பட்டாது.

சமீபத்தில் தியேட்டர் வளாகத்தில் ரிவ்யூ எடுக்க அனுமதிக்கக் கூடாது என வேண்டுகோள் விடுத்தீர்கள். ஆனால் படத்தயாரிப்பு ப்ரோமோஷன் மூலம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றத்தை உண்டாக்குகிறார்களே?

நான் ரிவ்யூ எடுப்பது தொடர்பாக எனது கருத்தை மட்டும் தான் தெரிவித்தேன். மற்றபடி ரிவ்யூ எடுக்க விடுவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவாகும். அதேசமயம் இதுபோன்ற ரிவ்யூவால் ப்ரோமோஷன் கிடைக்கும் என படக்குழுவும் நினைப்பது அவர்களின் எண்ணமாகும். இதில் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

கடந்தாண்டை விட இந்தாண்டு அதிக தெலுங்கு, மலையாளம் படங்கள் தமிழிலும் நல்ல கலெக்‌ஷனை பார்த்தது பற்றி?

இது இன்றைக்கு நேற்று நடந்தது இல்லை. பல ஆண்டுக்காலமாக நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. நல்ல படங்கள் எந்த மொழியில் இருந்தாலும் அதனை மக்கள் வரவேற்பார்கள். இது தொடர்ச்சியாக நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.

2025 சினிமா உலகம் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?

கண்டிப்பாக நல்ல வளர்ச்சியை எட்டும் என நம்புகிறேன். பொறுத்திருந்து பார்க்கலாம்.

Latest News