5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TVK Vijay : அரசியல்.. போதைப்பொருள்.. மாணவர்கள் சந்திப்பில் விஜய் பேசிய முழு விவரம்!

Tamilaga Vettri Kazhagam vijay speech: மருத்துவம், பொறியியல் மட்டும் படிப்பு இல்ல மற்ற துறைகளிலும் மாணவர்கள் சேர்ந்து படிக்க வேண்டும். 100 சதவீதம் உழைப்பு போட்டால் எல்லா துறைகளிலும் சாதிக்க முடியும் என்றும் தெரிவித்தார். ஒரு துறையில் சிறந்து விளங்கினால், அதன் தலைமையிடத்துக்கு நீங்கள் செல்ல முடியும். அதனை தான் இன்னும் நல்ல தலைவர்கள் தேவை என்றேன். அதுமட்டுமில்லை, எதிர்காலத்தில் அரசியலும் ஒரு தொழில் விருப்பமாக வர வேண்டும் என்பது எனது எண்ணம். நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.

TVK Vijay : அரசியல்.. போதைப்பொருள்.. மாணவர்கள் சந்திப்பில் விஜய் பேசிய முழு விவரம்!
விஜய்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 28 Jun 2024 12:14 PM

தமிழக வெற்றிக் கழகம்: நடிகரும் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறார். இதற்கு முன்னதாக பேசிய விஜய் மாணவர்களுக்கு பல அறிவுறைகளை வழங்கியுள்ளார். முதலில் மாணவர்களை ‘Say no to drugs’ என உறுதிமொழி ஏற்க்க வைத்த விஜய் தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கம் அதிகமாக இருப்பதை பார்க்கையில் ஒரு தந்தையாக மிகவும் வருந்துவதாக தெரிவித்துள்ளார். போதை பொருள் தடுப்பை ஆளும் அரசு தவறவிட்டதாக நான் சொல்லவில்லை. நாம் சுய ஒழுக்கத்துடன் இருக்கவேண்டும் என்பதற்காகவே சொல்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சமூக வலைதளத்தில் அதிகமாக புரணி பேசுவதாக தெரிவித்த விஜய், நல்லவர்களை கெட்டவர்களாகவும், கெட்டவர்களை நல்லவர்களாகவும் இந்த சமூக வலைதளம் மூலம் சிலர் மாற்றுகின்றனர்.

10 மற்றும் 12 வகுப்பில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விஜய்யின், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஊக்கத்தொகை அளிப்பட இருப்பதாக சமீபத்தில் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரண்டு கட்டங்களாக இந்த நிகழ்ச்சி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி காலை 10 மணி அளவில் தொடங்கியது.

கடந்த ஆண்டு விஜய் இந்த நிகழ்ச்சியை நடத்தியபோது அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தனது கட்சி பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம்(Tamizhaga Vetri kazhagam) என்று அறிவித்தார். கட்சி பெயரில் எழுதுப் பிழை இருப்பதாக பலர் கருத்து தெரிவித்ததும் கட்சியின் பெயரினை, தமிழக வெற்றிக் கழகம் என மாற்றி அறிவித்தார்.

தனது கட்சி ஆரம்பித்த பிறகு மக்களை நேரடியாக சந்திக்காத விஜய் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து பெரிய கூட்டத்தினர் இடையே விஜய் பேசியது என்பது இந்த மாணவர்கள் சந்திப்புதான். இந்த சந்திப்பில் மாணவர்களிடையே அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு தமிழகத்தில் மக்களிடையே நிலவியது.

இந்நிலையில் அவர் மாணவர்களை சந்தித்துப் பேசுகையில், அவரது பாணியில், நடந்து முடிந்த பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த தம்பி, தங்கைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள். தமிழக வெற்றிக் கழகத்தின் தோழர்களுக்கும் பணிவான வணக்கங்கள். மீண்டும் ஒரு முறை எதிர்கால தமிழகத்தின் இளம் மாணவ, மாணவிகளான உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. உங்களை பார்க்கும்போது ஒரு பாசிட்டிவ் பவர் கிடைக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும் மருத்துவம், பொறியியல் மட்டும் படிப்பு இல்ல மற்ற துறைகளிலும் மாணவர்கள் சேர்ந்து படிக்க வேண்டும். 100 சதவீதம் உழைப்பு போட்டால் எல்லா துறைகளிலும் சாதிக்க முடியும் என்றும் தெரிவித்தார். ஒரு துறையில் சிறந்து விளங்கினால், அதன் தலைமையிடத்துக்கு நீங்கள் செல்ல முடியும். அதனை தான் இன்னும் நல்ல தலைவர்கள் தேவை என்றேன். அதுமட்டுமில்லை, எதிர்காலத்தில் அரசியலும் ஒரு தொழில் விருப்பமாக வர வேண்டும் என்பது எனது எண்ணம். நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.

நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று தெரிவித்த அவர், தமிழகத்திற்கு நல்ல தலைவர்களின் தேவை அதிகமாக உள்ளது. அரசியலில் மட்டும் அல்ல எல்லா துறைகளிலும் நன்கு படித்த தலைவர்கள் வரவேண்டும் என்று தெரிவித்தார்.

Also read… ரஜினியுடன் மோதும் சூர்யா… கங்குவா ரிலீஸ் தேதியை வெளியிட்டது படக்குழு!

தொடர்ந்து பேசிய விஜய் தமிழகத்தில் தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கம் அதிகமாக இருப்பதை பார்க்கையில் ஒரு தந்தையாக மிகவும் வருந்துவதாக தெரிவித்துள்ளார். போதை பொருள் தடுப்பை ஆளும் அரசு தவறவிட்டதாக நான் சொல்லவில்லை. நாம் சுய ஒழுக்கத்துடன் இருக்கவேண்டும் என்பதற்காகவே சொல்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் உங்கள் நண்பர்கள் யாரேனும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தால் அவர்களை நீங்கள் நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

செய்தி என்பது வேறு, கருத்து என்பது வேறு. எது உண்மை, எது பொய் என்பதை ஆராய கற்றுக்கொள்ளுங்கள். அப்போது தான் உண்மையிலேயே நமது நாட்டில் என்ன பிரச்சினை, மக்களுக்கு என்ன பிரச்சினை, சமூக தீமைகள் பற்றி தெரியவரும். அதை தெரிந்துகொண்டால் ஒருசில அரசியல் கட்சிகள் செய்கின்ற பொய் பிரச்சாரங்களை நம்பாமல், நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க கூடிய நல்ல விசாலமான உலக பார்வை உங்களால் வளர்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Latest News