5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Actor Delhi Ganesh: நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்..

தமிழ் திரையுலகிம் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு ராமநாதபுரத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் காலமானார். இந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாடக நடிகராக இருந்த இவர் தமிழ் திரையுலகில் தனெக்கென ஒரு இடத்தை உருவாக்கினார். அவரது மறைவை ஒட்டி பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Actor Delhi Ganesh: நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்..
மறைந்த நடிகர் டெல்லி கணேஷ்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 10 Nov 2024 07:35 AM

தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  80 வயதான அவர் நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமான, ராமநாதபுரத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அங்கேயே வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1944 ஆம் ஆண்டு பிறந்த இவர் தூத்துக்குடியில் பிறந்தார். திரையுலகத்தில் காலடி எடுத்து வைக்கும் முன் 1964 முதல் 1974 ஆம் ஆண்டு வரை இந்திய விமானப்படையில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. முதன் முதலில் நாடக கலைஞராக அறிமுகமானார். தக்‌ஷின பாரத நாடக சபா எனப்படும் டெல்லி நாடக சபாவில் உறுப்பினராக இருந்தவர். அதனை தொடர்ந்து அவர் திரையுலகில் அறிமுகமானார். அவர் நடித்து வெளியான முதல் திரைப்ப்படம் பட்டினப்பிரவேசம். இவரை தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்தவர் கே. பாலசந்திரன்.

குணச்சித்திர நடிகராக இருந்து கவனத்தை ஈர்த்தவர்:

பெரும்பாலான படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். இருப்பினும் அந்த திரைப்படங்களில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் முன்னனி நடிகர்களான கமல், ரஜினி, விஜயகாந்துடன் இணைந்து நடித்துள்ளார். குணச்சித்திர நடிகராக இருந்த டெல்லி கணேஷ், அபூர்வ சகோதரர்கள் படத்தில் மாறுபட்டு வில்லனாக நடித்துள்ளார்.

மேலும் படிக்க: அமரன் வசூலை ஈடுகட்டும் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர்.. வசூல் எவ்வளவு தெரியுமா?

தான் நடிக்கும் எந்த ஒரு கதாப்பாத்திரமாக இருந்தாலும் சரி, அத்திரைப்படத்தில் கதாநாயகனுக்கு எந்த அளவு முக்கியட்த்துவம் இருக்கிறதோ அதே அளவு முக்கியத்துவம் இவரது கதாப்பாத்திரத்திற்கும் இருக்கும். ஒவ்வொரு கேரக்டரும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. குறிப்பாக அவ்வை சண்முகி, நாயகன், சிந்து பைரவி, மைக்கேல் மதன காமராஜன், ஆஹா, தெனாலி போன்ற திரைப்படங்களில் வரும் அவரது ரோல் மக்களிடையே ஒரு தனி இடம் பிடித்துள்ளது. நகைச்சுவையாக இருந்தாலும் சரி, சீரியஸான ரோலாக இருந்தாலும் சரி அதில் தனித்துவமான நடிப்பை வெளிக்காட்டுவதில் வல்லவர்.

சின்னத்திரையில் நடிகர் டெல்லி கணேஷ்:

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 400 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் இவர் சிறந்த டப்பிங் கலைஞரும் கூட. திரைப்படங்களை தவிர்த்து இவர் 8 சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். பிரபல தமிழ் தொலைக்காட்சியில் வெளியான கஸ்தூரி, வசந்தம் உள்ளிட்ட தொடர்களில் அப்பா வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1979ம் ஆண்டு பசி திரைப்படத்திற்கு “தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். அதோடு, 1993 – 1994ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில அரசின் “கலைமாமணி விருது”ம் டெல்லி கணேஷ் பெற்றுள்ளார்.

மேலும் படிக்க: இணையத்தை கலக்கும் நடிகை ரம்யா பாண்டியனின் கல்யாண போட்டோஸ்

இன்று மாலை நல்லடக்கம்:

இப்படி தனது கடைசி காலம் வரை திரையுலகில் தனது நடிப்பை வெளிப்படுத்தியவர். கடந்த சில காலமாக வயது மூப்பு காரணமாக சினிமாவில் நடிக்காமல் ஓய்வு பெற்று வந்தார். கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி இவரின் 80 வது பிறந்த நாளை முன்னிட்டு சதாபிஷேகத்தை நடத்தினர். இதில் பல திரையுலக கலைஞர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிட்வித்தனர். இந்நிலையில் ராமநாதபுரத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் நேற்று இரவு உடல் நல்க்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

அங்கேயே பொது மக்கள் மற்றும் பிரபலங்களில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Latest News