அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் சிக்கல்.. நெருங்கும் சிறை? தெலங்கானா அரசு அடுத்த மூவ்!
Allu Arjun case: புஷ்பா-2 படத்தின் முதல் காட்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஹைதராபாத்தில் ரசிகை ஒருவர் மரணம் அடைந்தார். இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். அவருக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் புஷ்பா-2 படத்தின் முதல் காட்சியின் போது ரசிகை ஒருவர் மரணம் அடைந்தார். கூட்ட நெரிசலில் சிக்கி அவர் மரணம் அடைந்தார். இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் உள்பட புஷ்பா படத்தின் நடிகர்கள் மற்றும் தியேட்டர் அதிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நடிகர் அல்லு அர்ஜுன் முன்பிணை கோரி ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவருக்கு முன்ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார்.
அல்லு அர்ஜுன் கைது
அல்லு அர்ஜுனின் கைதுக்கு எதிராக திரைப் பிரபலங்கள் உள்பட பலரும் கருத்து தெரிவித்து இருந்தனர். இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் நேரடியாக சம்பந்தப்படவில்லை.
ஆகவே, அவர் கைது செய்யப்பட்டது தவறு என பலரும் கருத்து தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் கைதுக்கு ஆதரவாக சிலரும் கருத்து தெரிவித்து இருந்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து தெலங்கானாவில் அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இதையும் படிங்க : Pushpa OTT Release Date: தியேட்டரில் மாஸ் காட்டும் புஷ்பா 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
போலீசார் விளக்கம்
இதற்கிடையில் அல்லு அர்ஜுன் கைது தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. இதற்கு, விளக்கம் அளிக்கும் வகையில் மாநில காவல் துறை அளித்த விளக்கத்தில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் நிகழ்வில் கலந்துகொண்ட அல்லு அர்ஜுனைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்து இருந்தனர்.
முன்னதாக இந்த வழக்கில் அல்லு அர்ஜுனுக்கு கீழமை நீதிமன்றம் 14 நாள்கள் காவல் வழங்கி இருந்தது. இதையடுத்து ஜாமின் வழங்கிய உயர் நீதிமன்றம் ரூ.50 ஆயிரம் பிணையில் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
அல்லு அர்ஜுனுக்கு சிறை
இந்நிலையில் அல்லு அர்ஜுன் அன்றைய தினம் இரவு முழுக்க சிறையில் இருந்தார். தொடர்ந்து, மறுநாள் காலை விடுவிக்கப்பட்டார். முன்னதாக அல்லு அர்ஜுன் வெளியிட்ட செய்தியில், கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ரசிகை மரணம் அடைந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்தார்.
மேலும், அது துரதிர்ஷ்டவசமான சம்பவம். என் மனதை மிகவும் பாதித்தது எனத் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் புதிய தகவல் ஒன்று இன்று வெளியாகி உள்ளது.
மீண்டும் சிறை?
அதில், அல்லு அர்ஜுன் விவகாரத்தில் தெலங்கானா மாநில காவல்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.
அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட ஜாமின் ரத்து செய்யப்படும் பட்சத்தில் அவர் மீண்டும் சிறைக்கு செல்ல நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஷாக் ஆன ஷாருக்கான்.. வசூல் வேட்டையில் புஷ்பா-2.. பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் லீக்!