5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மீண்டும் பெரிய அறுவை சிகிச்சை… தொகுப்பாளினி டிடி-யின் உருக்கமான பதிவு

முன்னதாக தனது மூட்டு பிரச்னை குறித்து பேசியிருந்த டிடி 2013ம் ஆண்டு எனக்கு காலில் வலி ஏற்பட்டு ஆப்ரேஷன் செய்தேன் கிட்டத்தட்ட 10 வருடத்திற்கும் மேலாக வலியுடன் போராடி வருகிறேன். வலியே இல்லாமல் நான் இருந்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். என்னால் 2 நிமிஷம் கூட நிற்க முடியாது, வீல் சேரில் தான் வெளியில் வருகிறேன். அதே போல, கையில் ஸ்டிக் இருந்தால் 2 நிமிஷமாவது என்னால நிற்கவே முடியும் என்று தெரிவித்திருந்தார். இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் இனி டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டாரா என்று வருத்தம் தெரிவித்து வந்தனர்.

மீண்டும் பெரிய அறுவை சிகிச்சை… தொகுப்பாளினி டிடி-யின் உருக்கமான பதிவு
தொகுப்பாளினி டிடி
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Sep 2024 10:34 AM

பிரபல தொகுப்பாளினி டிடி தனக்கு நடந்த மூட்டு அறுவை சிகிச்சை குறித்து வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி தான். பள்ளி படிக்கும் போது தனது குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த வேலைக்கு வந்த டிடி-க்கு சினிமா ரசிகைகளுக்கு இருக்கும் அளவுக்கு ரசிகர்கள் அதிகம். கடந்த சில வருடங்களாக தனது மூட்டு பிரச்னை காரணமாக பெரிய அளவில் தொலைக்காட்சி நிகழ்சிகளை தொகுத்து வழங்காமல் இருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக தனக்கு நடந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சை குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளர். ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், காஃபி வித் டிடி, அச்சம் தவிர், அன்புடன் டிடி, என்கிட்ட மோதாதே, பிக்பாஸ் கொண்டாட்டம், ஸ்பீடு கெட் செட் கோ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் திரைப்படங்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் சிறப்பு நிகழ்ச்சிகள், விருது விழாக்கள் என பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

சின்னத்திரை மட்டுமின்றி நளதமயந்தி, விசில் உள்ளிட்ட படங்களிலும் சிறு சிறு வேடங்களில் தலைகாட்டியிருக்கிறார் அவர். கடைசியாக டிடி சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காஃபி வித் காதல் படத்தில் நடித்திருந்தார். அதேபோல் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் அவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தனது மூட்டு பிரச்னை குறித்து பேசியிருந்த டிடி 2013ம் ஆண்டு எனக்கு காலில் வலி ஏற்பட்டு ஆப்ரேஷன் செய்தேன் கிட்டத்தட்ட 10 வருடத்திற்கும் மேலாக வலியுடன் போராடி வருகிறேன். வலியே இல்லாமல் நான் இருந்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். என்னால் 2 நிமிஷம் கூட நிற்க முடியாது, வீல் சேரில் தான் வெளியில் வருகிறேன். அதே போல, கையில் ஸ்டிக் இருந்தால் 2 நிமிஷமாவது என்னால நிற்கவே முடியும் என்று தெரிவித்திருந்தார். இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் இனி டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டாரா என்று வருத்தம் தெரிவித்து வந்தனர்.

Also read… Cinema Rewind: 4 வயசுல இருந்து பாக்குறேன்…  அந்த நடிகரோட வளர்ச்சி ரொம்ப சந்தோஷமா இருக்கு – நடிகை நதியா

தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத டிடி அவ்வப்போது பெரிய நடிகர்களின் படங்களின் பாடல் வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கி வந்தார். அதில் நீண்ட நேரம் நிற்க முடியாமல் அதனையும் தவிர்க்க தொடங்கினார். அதனை தொடர்ந்து கமல் ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கினார் டிடி. அப்போது அவருக்கு அமர நாற்காழி வழங்கப்பட்டிருந்தது. அதுகுறித்து பேசிய டிடி ”நான் நீண்ட நேரம் நிற்க முடியாது என்பதால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது என்று கூறினேன். ஆனால் கமல் சார் நான் தான் தொகுத்து வழங்க வேண்டும் என்றும் எனக்கு நாற்காழி கொடுத்து அமர வைக்க வேண்டும் என்று” கமல் கூறியதாக டிடி தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து பல முக்கிய நடிகர்களின் நிகழ்ச்சிகளை நாற்காழியில் அமர்ந்தே டிடி தொகுத்து வழங்கியிருந்தார்.

தற்போது டிடி அவரது கால் பிரச்சனையை சரிசெய்ய முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு இருக்கிறார். காலில் உலோகத்தால் ஆன செயற்கையான முட்டி அவருக்கு பொருத்தப்பட்டு இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் 4-வது அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும், அதில் முழுவதுமாக தனது மூட்டை மாற்றியுள்ளதாகவும் தற்போது தான் சரியாகி வருவதாகவும் கூறி டிடி ஒரு உருக்கமான ஒரு பதிவிட்டு இருக்கிறார். அவர் விரைவில் குணமாக வேண்டும் என எல்லோரும் வாழ்த்தி வருகின்றனர்.

Latest News