5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Serial Actor: பிரபல சீரியல் நடிகர் தற்கொலை.. நள்ளிரவில் நடந்தது என்ன?

Suicide: கடந்த வாரம் சாலை விபத்தில் உயிரிழந்த சீரியல் நடிகை பவித்ரா ஜெயராமின் பிரிவை தாங்காமல், மன உளைச்சலில் இருந்த தெலுங்கு சீரியலில் பவித்ரா உடன் இணைந்து நடித்த நடிகரும், அவரது கணவருமான சந்து அவர்கள் இணைந்து வாழ்ந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து ஏற்பட்ட இவர்களின் மரணம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Serial Actor: பிரபல சீரியல் நடிகர் தற்கொலை.. நள்ளிரவில் நடந்தது என்ன?
பவித்ரா – சந்து
intern
Tamil TV9 | Updated On: 18 May 2024 12:06 PM

பிரபல தெலுங்கு சீரியல் ஆன திரிநயனி என்ற சீரியலில் நடித்து வந்த பவித்ரா ஜெயராம் திலோத்தமா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரையில் பிரபலமானார். இதற்கு முன்னர் பல கன்னட சீரியல்களிலும் பல தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் கணவரை பிரிந்து தன்னுடன் நடித்த நடிகர் சந்திரகாந்த் என்ற சந்து உடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்துள்ளார். இருவரும் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக சென்ற போது சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. கடந்த வாரம் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஹனகெரேவுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஷெரிப்பள்ளி கிராம் அருகே கார் வந்த போது, கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பவித்ரா சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார். பவித்ரா உடன் காரில் பயணித்த அவரது சகோதரி அபெக்ஷா, சந்திரகாந்த், கார் டிரைவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.

Aslo Read: ”பாஜகவின் பிளவுவாதக் கனவு பலிக்காது” முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

இந்த விபத்தில் சிறு காயங்களுடன் தப்பித்த சந்திரகாந்த் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு மரணம் அடைந்துள்ளார். இந்த மரணம் தெலுங்கு திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் சந்து என்ற சந்திரகாந்திற்கு ஷில்பா என்ற பெண்ணுடன் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அவர்களைப்பிரிந்து ஆறு வருடங்களாக பவித்ராவுடன் காதல் ஏற்பட்டு, இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர் என்ற தகவல் சமூக வலைதளஙகளில் வேகமாக பரவி வருகிறது. நடிகை பவித்ரா ஜெயராமிற்கும் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த நிலையில், அவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பவித்ரா மற்றும் சந்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த ஐதரபாத்தில் உள்ள மணிக்கொண்டா அல்காப்பூர் அல்காபூர் காலனியில் உள்ள தனது வீட்டில் சந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். விபத்தில் உயிரிழந்ததில் இருந்தே அவரின் மரணத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மனைவி பவித்ரா சாலை விபத்தில் உயிரிழந்தது முதலே சந்திரகாந்த் தனது சமூக வலைதளங்களில் மிகவும் சோகமான பதிவுகளையும் கருத்துகளையும் வெளியிட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் தன்னுடைய பிறந்த நாள் கொண்டாடிய சந்து, பவித்ரா ஜெயராம் எடிட் செய்த பழைய வீடியோவை சமூக வலைதளத்தில், அப்பா எனக்காக இரண்டு நாட்கள் காத்திருங்கள் என பதிவிட்டு இருக்கிறார். அப்போது யாரும் அதனை பொருட்படுத்தவில்லை. ஆனால், பவித்ரா மறைவின் போதே தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அவருக்குள் இருந்திருப்பதால், அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று அவரது நட்பு வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Also Read: Gold Price Today: ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

தெலுங்கு சினிமாவில் நட்சத்திர நடிகர்கள், பிரபலங்களின் அடுத்த அடுத்த மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சந்துவின் தற்கொலை குறித்து முக்கிய காரணம் என்ன என்பது பற்றி துரிதமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வாகாது. மன அழுத்தம், தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் அதனை மனம் விட்டு பேசி சரிசெய்ய முடியும்.

மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050

Latest News